பின்பற்றுபவர்கள்

6 மே, 2006

முன்னாள் பகுத்தறிவு வாதிகளின் பரிமாணம்

சொன்னதை திரும்ப திரும்ப சொன்னால், மக்கள் நம்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையில், திமுக், அதிமுக நன்றாகவே வேசம் போட்டு வருகிறது. தன் கூட்டணியை குறைத்து மதிப்பிட்ட கருத்து கணிப்புகளை தாம் நம்பவில்லை என்று கூறிய திமுக கூட்டணி, இன்று கருத்து கணிப்புகளை காட்டியே பலம் சேர்க்க நினைக்கிறது. முன்பு கருத்துகணிப்புகளை மக்களின் மனநிலையாக கருதிய அதிமுக, இப்பொழுது பத்திரிக்கைகள் திமுகவிற்கு துணைப் போனதாக திரித்து வெளியிடுவதாகவும் தெரிவிக்கிறது.
வழக்கமாக சோசியத்தில் தீவிரமாக இருக்கும் அதிமுகாவை பின்னுக்கு தள்ளும் விதமாக சோதிட நம்பிக்கையை வைத்து திமுக நாளிதளான தினகரன் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

உன்மையோ, பொய்யோ திரும்ப திரும்ப சொன்னால், அதன் மேல் சந்தேகம் வலுப்படும் என்பது இன்னும் தாங்கள் பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியாது போலும்.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சாக்கடையப் பார்த்தவன், ஒன்று எதுங்கிப் போய்விட வேண்டும்; இல்லையேல் உள்ளே இறங்கிச் சுத்தம் செய்ய வேண்டும். வெறுமனே அதைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பதில் என்ன பயன்? அது போலத் தான் அரசியலும். என் கருத்து தவறாகக் கூட இருக்கலாம்.

ஆனால், நல்ல பொழுதுபோக்காக எப்பொதுமே அரசியல் அமைந்து விடுவது செளகர்யம் தான். இல்லைன்னா போர் அடிக்குமே.......

- குப்புசாமி செல்லமுத்து

பெயரில்லா சொன்னது…

என்ன ஆச்சு கோவியாரே? சேம் சைடு கோல் எல்லாம் போடுறீங்க?!

கோவி.கண்ணன் சொன்னது…

//சேம் சைடு கோல் எல்லாம் போடுறீங்க?! //
மாயவரத்தாரே, நீங்கள் என்னை திமுக அனுதாபியாக நினைத்தால் நான் என்ன செய்ய முடியும் ?

பெயரில்லா சொன்னது…

இது..இதைத் தான் நான் உளறல்னு சொன்னேன். நம்ம நட்சத்திர முத்து பயந்துட்டாருங்க. உளறலை உளறல் என்று சொல்பவன் பயங்கரவாதியா?

இந்த பகுத்தறிவுவாதிகள் அரசியல் கொள்ளைக்காரர்கள் அன்றி வேறு யார்?

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த பகுத்தறிவுவாதிகள் அரசியல் கொள்ளைக்காரர்கள் அன்றி வேறு யார்? //

கால்கரி சிவா, சிக்கலாக யாரவது கொக்கி போடுவாங்கன்னு எதிர்ப்பார்த்து தான் கவனமாகவே முன்னாள் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லியிருக்கிறேன், மற்றப்படி இதுதான் சாக்குன்னு, ஒட்டுமொத்தமாக பகுத்தறிவாதிகளை அரசியல் கொள்ளைக் காரர்கள் என்று நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆன்மிகமாக இருந்தாலும், பகுத்தறிவு பேசுபவர்களாக இருந்தாலும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டால் நகைப்புக்கிடம் தான்.

TBCD சொன்னது…

அட்டெண்டெண்ச் போட்டுக்கிறேன்..

[படம் தெரியவில்லை]

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்