பின்பற்றுபவர்கள்

12 ஜூன், 2006

வண்ணக் குழப்பம் (ஹைக்கூ)



வண்ணக் குழப்பம் (ஹைக்கூ - குழம்பிய குட்டையில் பிடித்த மீன்)

குழம்பிய வண்ணக் குட்டையை தொட்ட

தூரிகையை பிடித்து கைகள் வரைய தெளிவாக

துள்ளிக் குதித்தபடி ஓவியத்தில் வண்ண வண்ண மீன்கள் !

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

குழம்பிய குட்டையில்
ப(பி)டித்த கவிதை
வண்ண மயம்.

:)

பொன் சுதா சொன்னது…

நண்பரே வணக்கம். மறைபொருள் குறும்படம் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறீர்களா?

நான் அதன் இயக்குநன்.

pon.sudha@yahoo.com க்கு பதில் அனுப்புங்கள் நண்பரே.....

கோவி.கண்ணன் சொன்னது…

//பொன் சுதா said...
நண்பரே வணக்கம். மறைபொருள் குறும்படம் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறீர்களா?

நான் அதன் இயக்குநன்.

pon.sudha@yahoo.com க்கு பதில் அனுப்புங்கள் நண்பரே.....

9:00 PM, September 09, 2008//

பொன்.சுதா அவர்களே,
2006ல் எழுதிய கவிதைக் குறித்து தற்பொழுது கேட்கிறீர்கள், ஹைகூ கவிதைகள் பிடிக்கும், கவிதைகள் பலரால் விரும்பப் படுவதில்லை என்பதால் எனது சிந்தனைகளில் அவை ஏற்படுவதும் குறைந்துவிட்டது.

குறும்பட இயக்குனரான உங்களுக்கு வாழ்த்துக்கள், திரைப்படங்கள் மூலம் எதையும் எளிதாக பலருக்கு எடுத்துச் சொல்லிவிட முடியும், விரைவில் பெயர் வெளியே தெரியும் படி உங்கள் துறையில் முன்னேற வாழ்த்துகள்.

எனக்கு குறும்(பு)பட அனுபவம் இல்லை. :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்