பின்பற்றுபவர்கள்

29 ஜூன், 2006

தட்டுக்கள்


அன்று ஒருநாள்
ஆலயம் நோக்கிச் சென்ற
என்னிடம் 'அய்யா போடுங்கள்' என்ற
தட்டேந்திய பிச்சைக்காரனுக்கு
தடவிய பாக்கெட்டில்
நூறன்றி வேறில்லை என்பதால்
சில்லரை தட்டுப்பாடு !
பிச்சைக்காரன் என்றாலே
எரிச்சல் வரும் என்னில்
மேலும் எரிச்சல் வர,
இல்லையென்று
செய்கை செய்து, கை
விரித்துக் காட்டிவிட்டு
ஆலயம் உள்ளே வந்துவிட்டேன்

அமைதியான தரிசனம்,
ஆராதனை முடிந்ததும்,
கரிசனமாய் நீட்டிய
காணிக்கைத் தட்டிற்காக
தடவிய அதே பாக்கெட்டில்
புடைப்புடன் இருப்பைச்
சொல்லியது அதே நூறு ரூபாய் !
வேறென்ன செய்ய ?
போட்டுவிட்டு வந்துவிட்டேன் !
இடையிடையே
சாமி தரிசனத்திலும், அந்த
தரித்திர முகமே நினைவுக்குவர
மீண்டும் சொல்லிக் கொண்டேன்
பிச்சைக்காரன் என்றால்
எனக்கு எரிச்சல் தான் !

24 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கவிதை... எனவே நோ ஆராய்ச்சி

கோவி.கண்ணன் சொன்னது…

//கவிதை... எனவே நோ ஆராய்ச்சி//
நாங்களெல்லாம் எப்படித்தான் மெசேஜ் சொல்றதாம் ? :)

பெயரில்லா சொன்னது…

உண்மை சம்பவமோ ??

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...
உண்மை சம்பவமோ ??
//
சம்பவம் அல்ல பார்க்கும் உண்மை சம்பவங்கள்

பெயரில்லா சொன்னது…

கண்ணன் சில்லறை இல்லைன்னுதானே சொன்னீங்க..

பிச்சைக்காரனுக்கு நூறு ருபா நோட்டா..

கடவுளுக்கு அது சின்ன காணிக்கைதான் ஆனா பிச்சை எடுப்பவருக்கு?

நீங்க எழுதனதே நானே பல சமயங்கள்ல உணர்ந்திருக்கேங்க..

பெயரில்லா சொன்னது…

நிகழும் நிஜங்களை அப்படியே கவிதை ஆக்கி இருக்கிறீர் கோவி...நல்ல கவிதை...

ஆனால்,இன்னும் இறுக்கமாக கட்டி இருக்கலாமோ என்பதை தவிர்க்க இயலவில்லை...

நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

//கடவுளுக்கு அது சின்ன காணிக்கைதான் ஆனா பிச்சை எடுப்பவருக்கு?//

தலைப்பு 'தட்டுக்கள்' - இரண்டும் தட்டுக்கள் தான், நாம் எடை போடுவதில் எங்கு தவறுகிறோம் என்று சொல்ல முயன்றிருக்கிறேன்

ஜோசப் சார், என்னுடை பார்திபன் - வடிவேலு 2 காமடிப்பதிவுகளையும் படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள். நான் உங்கள் நகைச் சுவை எழுத்தின் ரசிகன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால்,இன்னும் இறுக்கமாக கட்டி இருக்கலாமோ என்பதை தவிர்க்க இயலவில்லை...//
படிப்பவர்களின் முகம் இளகவேண்டுமென்பது நோக்கம் மாறாகி இருக்கமாகிவிட்டால் என்ன செய்வது !

பெயரில்லா சொன்னது…

ரெண்டுமே தட்டுக்கள்தான்.

ஆனா இருக்கற இடம்?

ஒரு தட்டு நம்ம தகுதிக்குக்கீழே.( அதாலே அதை நம்மாலே தூக்கி எறிய முடியும்)

இன்னொண்ணு ஆண்டவன் சன்னிதானமாச்சே. நம்மைவிட உசந்தவங்ககிட்டே மனுஷன் எப்பவுமே
கொஞ்சம் தலை குனிஞ்சுதான் நிக்கிறானோ?

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
ரெண்டுமே தட்டுக்கள்தான்.

ஆனா இருக்கற இடம்?

//
துளசியக்கா, வள்ளலார் ஏழைகளின் வயிற்ப்றுபசி ஆற்றிவிட்டு இறைவனை நினை என்கிறார். கடவுள் நேரிடையாக யாருக்கும் உதவுவதில்லை. கருணை என்று சொல்லும் போது கடவுளை நினைக்கிறோம், கருணையுடன் இருந்தால் பிச்சைக் காரனுக்கு நாம் கடவுளாக தெரியமாட்டோமா ?

பெயரில்லா சொன்னது…

நல்ல கவிதை ஐயா. மனித சேவையே மாதவன் சேவை என்று எத்தனை பேர் சொன்னாலும் நாம் திருந்தப் போவதில்லை (நாம் என்று இங்கு சொன்னது நம் அனைவரும் என்ற பொருளில். நான் இப்படிச் செய்ததாக நினைவில்லை. கோவிலுக்குப் போய் தட்டில் காணிக்கையே வைக்காமல் ஆனால் வெளியே வந்தவுடன் அங்கிருக்கும் ஏழைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளேன் பல முறை. )

மனிதனுக்கு இருக்கும் பயத்தின் விளைவே இது. இறைவனிடம் பயப்படத் தான் நாம் முதலில் சொல்லிக் கொடுக்கப் படுகிறோம். இறைவனிடம் கொள்ளவேண்டியது அன்பு. அதன் வெளிப்பாடாய் இருக்க வேண்டியது ஜீவ காருண்யம் என்று சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை. சாமி கண்ணைக் குத்திடும் என்றே சொல்லிக் கொடுப்பதால் சந்நிதானத்தில் உள்ள தட்டைப் பார்த்தவுடன் பயந்து பணத்தைப் போட்டுவிடுகிறான். ஆனால் ஏழையைப் பார்த்தால் சில்லறை இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. :-) என் தம்பி பலமுறை 10 ரூபாய் நோட்டை எடுத்து ஏழைக்கிழவனுக்கும் கிழவிக்கும் கொடுத்து பலரின் புருவங்களை உயர்த்தியிருக்கிறான். :-)

பெயரில்லா சொன்னது…

நல்ல கவிதைதான் கோவி.கண்ணன் அவர்களே!

//கடவுளுக்கு அது சின்ன காணிக்கைதான் ஆனா பிச்சை எடுப்பவருக்கு?
//

நூறு ரூபாய் கடவுளுக்கு சின்ன காணிக்கைதான். ஆனால் நீங்கள் போடும் ஒரு ரூபாய் கூட பிச்சைக்காரனுக்கு பெரிய காணிக்கையே!
===================================

(அதெல்லாம் சரி, பிச்சைக் காரரிடமே நீங்கள் 100 ரூபாய்க்கு சில்லரை கேட்டிருக்கலாமே, இது சும்மா, தமாஷுக்கு :))

பெயரில்லா சொன்னது…

//என் தம்பி பலமுறை 10 ரூபாய் நோட்டை எடுத்து ஏழைக்கிழவனுக்கும் கிழவிக்கும் கொடுத்து பலரின் புருவங்களை உயர்த்தியிருக்கிறான்//

குமரன்,
இது கூட சிலரின் பார்வைக்கு இரக்க குணமாகத் தோன்றும். பிறரோ இ.வா என்றல்லவா ஏளனம் பேசிவிடுகின்றனர்.

பெயரில்லா சொன்னது…

இப்ப போறேன்..

லேட்டா வர்ரேன்..... ஒகே

பெயரில்லா சொன்னது…

இறைவனுக்கு கொடுப்பது ஒரு விதத்தில் முதலீடு போல.. அடுத்த முறை வரம் ஏதும் வேண்டும் போது கொஞ்சம் கூட குறைய இருந்தால் கூட..இந்த தொகையை மனதில் நினைத்துக் கொண்டு மீட்டருக்கு மேல் போட்டுக் கொடுக்க சொல்லலாம்..

பிச்சைக்காரருக்கு போட்டால் அது செலவு தானே .. ஹும் .. யாருக்குத் தெரியும்..இதுவும் கூட அடுத்த பிறவிக்கு உதவுமோ ! :)

நல்ல கவிதை கண்ணன்..
சுகா

நல்ல கவிதை

கோவி.கண்ணன் சொன்னது…

//(அதெல்லாம் சரி, பிச்சைக் காரரிடமே நீங்கள் 100 ரூபாய்க்கு சில்லரை கேட்டிருக்கலாமே, இது சும்மா, தமாஷுக்கு :) //
ஆக.. கேக்க மாட்டுருன்னு நெனெச்சன் ... சிபியண்ண நச்சின்னு நறுக்கு தெரிச்ச மாதிரியே கேட்டுப்புட்டாரே ....

கோவி.கண்ணன் சொன்னது…

// ஹும் .. யாருக்குத் தெரியும்..இதுவும் கூட அடுத்த பிறவிக்கு உதவுமோ ! :) //

பிச்சைக்காரருக்கு கிடைப்பது போய்டும் போல இருக்கே !

பெயரில்லா சொன்னது…

//கேக்க மாட்டுருன்னு நெனெச்சன் //

அதெப்படிங்க நீங்களே முடிவு பண்ணலாம்?

பெயரில்லா சொன்னது…

பிச்சைக்கும் காணிக்கைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை விளக்கும் 'தட்டுக்கள்' கவிதை அருமை.


சிந்தனையுடன்
பச்சோந்தி

கோவி.கண்ணன் சொன்னது…

விளக்கும் 'தட்டுக்கள்' கவிதை அருமை.//

பச்சோந்தி அவர்களே ... இது உங்கள் புல்லாங்குழல் (கவிதை) லிருந்து உயிர்பெற்று எழுந்த கவிதை :) ... பெருமை உங்களுக்குத் தான் :)

பெயரில்லா சொன்னது…

கண்ணன்,

அருமை!!.

ஆனால், பிச்சை எடுப்பதை நான் எப்பொழுதும் ஆதரிப்பதில்லை.

கோவிலுக்கு போய் பல வருடங்கள் ஆகின்றன..

நான் கட்டிட துறையில் இருந்தபோது கடினமாக உழைக்கும் கடவுள்களை பார்த்திருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால், பிச்சை எடுப்பதை நான் எப்பொழுதும் ஆதரிப்பதில்லை.//
நானும் கூடத்தான் ..

பிச்சைக்காரர்களில் பலவகை உண்டு ... ஆனால் பொதுபெயரில் தான் அனைவரையும் அழைக்கிறோம். நான் அந்த நிலைக்கு விருப்பமில்லாமலும், வழியில்லாமலும் வந்தவர்களை நினைத்துப்பார்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன்,

நிச்சயம் எனக்கு இதில் உடன்பாடில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி.கண்ணன்,

நிச்சயம் எனக்கு இதில் உடன்பாடில்லை.//
உங்கள் உடன்பாட்டின் நிலைப்பாட்டிற்கு உடன்படுகிறேன் :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்