பின்பற்றுபவர்கள்

29 மே, 2007

சிவாஜி என்னும் பூச்சாண்டி வருகிறது..

வியாபார பொருள்களை பதுக்கி வைத்தால் டிமாண்ட் ஏற்படும் போது அதிக லாபத்துக்கு விற்கலாம் என்ற மக்கள் விரோத கோட்பாடு படி, சினிமா ரசிகர்களின் பாக்கெட்டை காலி செய்யும் விதமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிவாஜி படம் வெளிவருகிறது. சிறுவர்களாக இருக்கும் போது 'சிவாஜி வாயிலே ஜிலேபி' என்று 3 x 3 கட்டம் போட்டு எழுதுவோம். ஜிலேபிக்கு பதில் அல்வா என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். கிடைப்பது ரசிகர்களுக்கு.

இதோ வருது அதோ வருது என்று தற்பொழுது ரிலிஸ் தேதி ஜூன் 15 என்கிறார்கள். சிவாஜி வெளிவந்தால் சிறுபட்ஜெட் படங்கள் படுத்துவிடுமோ என்று அச்சம் காரணமாக எடுக்கப்பட்ட பல படங்கள் பெட்டியில் உறங்குவதாக சொல்கிறார்கள்.

அப்படி ஒரு படம் தங்கர்பச்சானின் 'பள்ளிக் கூடம்' ஏப்ரல் - மே பள்ளிக் கூட விடுமுறையில் வெளி இடவேண்டும் என்ற திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டு எடுத்து முடிக்கப்பட்டு சிவாஜி பூச்சாண்டியால் வெளி வராமல் தவி(ற்)க்கிறது. தங்கர்பச்சானுக்கு வெளியிட விருப்பம் இருந்தாலும் படம் எடுக்க காசு போட்ட தயாரிப்பாளர் 'நோ' சொல்கிறாராம். விடுமுறை காலம் கழிந்து 'பள்ளிக்கூடம்' பள்ளிக் கூடங்கள் திறந்த பின்புதான் மணி அடிக்கும் போல் தெரிகிறது. பள்ளிக் கூட 'நேரம் தவறுவதற்கு' இதுவே காரணமாம். சிலருக்கு லாபம் பலருக்கு நட்டம் ! அரசியல் போல் சினிமாவும் 'இமேஜ்' தக்கவைத்துக் கொள்ள எதுவேண்டுமானாலும் செய்யும் !

இதுபோல் பலபடங்கள் ரஜினியின் 'சிவாஜி' க்கு பயந்து பெட்டியில் உறங்குகின்றன. படங்களுக்கு செலவு செய்த பணம் கொடுத்து உதவிய சேட்டுகள் வட்டிப் போட்டு கொழிக்கிறார்கள். எதிர்பார்ப்பை ரொம்பவே கிளப்பிவிட்டதால் திரை அரங்க உரிமையாளர்கள் படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட விழுக்காடு பங்குதரவேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக தெரிகிறது. டிக்கெட்விலை முதல் மாதத்தில் 500 - 1000 வரை போகும். ரசிகனின் பாகெட்டில் பெரிய ஓட்டை விழுந்து ஏவிஎம்ன் பட்ஜெட்டில் ஓட்டையை அடைத்து நிறப்பும் என எதிர்பார்கப்படுகிறது.

எல்லாம் எதற்காக ? 3 மணி நேர டயலாக்கில் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சனைகளை தீர்க்கப் போகும் பஞ்ச் டயலாக்குகளுக்காக ! ஜூன் 15 ஆம் தேதிக்கு முன்பே சென்னை வாசிகள் தேவையான பாலை வாங்கி கையிருப்பு வைத்துக் கொள்ளலாம். இல்லாவிடில் ஒரு வாரத்துக்கு கிடைக்காது. :)))))))))

மாயத்திரை !

சூப்பர் ஸ்டார் வாழ்க !

23 கருத்துகள்:

சிவபாலன் சொன்னது…

Ha Ha HA..

பத்த வச்சுட்டீயே பரட்டே...

Ha Ha Ha..

VSK சொன்னது…

சூப்பர் ஸ்டார் வாழ்க !

:))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//வியாபார பொருள்களை பதுக்கி வைத்தால் டிமாண்ட் ஏற்படும் //

ஆகா...சிவாஜிக்கு இப்படி ஒரு விளக்கமா?
அப்படீன்னா தலைவர் ரெண்டு வருஷமா பதுங்கி/பதுக்கி இருந்தாரா?...ஐயகோ! கொலை வெறிப் படை எங்கே? :-)

//பத்த வச்சுட்டீயே பரட்டே...//

ரிப்பீட்டூ!

Unknown சொன்னது…

யப்பா இப்பவே கண்ணை கட்டுதே :)
ஆமா உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

:)

தமிழ் மணத்தை கொளுத்துவோம்னு கூட பதிவு போடுவீங்க போல ?

"இந்த "பதிவுக்கு சம்மந்தமான எந்த பின்னூட்டமும் போடமாட்டேன் ஏன்னா ரஜினி படத்தை நினைச்சாலே அப்படி வருது "நல்லா :)

கோவி.கண்ணன் சொன்னது…

///மகேந்திரன்.பெ said...
யப்பா இப்பவே கண்ணை கட்டுதே :)
ஆமா உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

:)

தமிழ் மணத்தை கொளுத்துவோம்னு கூட பதிவு போடுவீங்க போல ?

"இந்த "பதிவுக்கு சம்மந்தமான எந்த பின்னூட்டமும் போடமாட்டேன் ஏன்னா ரஜினி படத்தை நினைச்சாலே அப்படி வருது "நல்லா :)
//

அடப்பாவி நீய்யா ?

ஏற்கனவே அடித்து ஆடும் கோவி.கண்ணனும் அலறும் பார்பனர்களும் - என்று பதிவை போட்டு பெயர் வாங்கி கொடுத்தது பத்தாதா ?

இப்ப தமிழ்மணத்தையும் இங்கே இழுக்கிறிரே ?

நான் என்ன பாவம் செய்தேன் ? எதுனாலும் பேசிதீர்த்துகிறலாம்.
:)

சட்னிவடை சொன்னது…

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்று ரஜினிக்குத் தெரியும்!

பெயரில்லா சொன்னது…

"சிவாஜி" யின் புகழ்(!) பரப்பும் கோவியார் வாழ்க

கோவியார் தற்கொலைப் படை
துபாய் மரம்
(பின்னே எத்தனை நாளைக்கு கிளையாவே இருக்க முடியும்?)

balachandar muruganantham சொன்னது…

இப்படி வைத்துக்கொள்ளலாம். சிவாஜி படம் வெளியிட்டால் என்ன. வெளியிடாட்டி என்ன. தங்கர்பச்சான் அவரது படத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தால், அவரது படம் சிவாஜியை விட நன்றாக வசூல் செய்யும். அவருக்கும் அவரது தயாரிப்பாளருக்கும் அந்த நம்பிக்கை இல்லை.

காலம் இதற்கு நன்றாகவே கடந்த காலத்தில் பதில் சொல்லியுள்ளது.
ஆளவந்தான், பாபா போன்ற படங்கள் ஈத்து போட்டு மூடப்பட்டன. படம் எடுப்பது, அது வியாபாரம். அப்படி தான் இருக்கும். மற்றவங்களை பற்றி கவலைப்படாமல் தான் செய்கின்றவற்றை நல்ல படியாக செய்தால் எல்லாம் நல்லதாக நடக்கும். அதற்கு யாரையும் குற்றம் கூற இயலாது.

பாலச்சந்தர் முருகானந்தம்
http://tamil.balachandar.net

மருதநாயகம் சொன்னது…

//ஜூன் 15 ஆம் தேதிக்கு முன்பே சென்னை வாசிகள் தேவையான பாலை வாங்கி கையிருப்பு வைத்துக் கொள்ளலாம். இல்லாவிடில் ஒரு வாரத்துக்கு கிடைக்காது. :)))))))))
//

அப்படியே பீர் பாட்டில்களையும் வாங்கி வைத்துக் கொள்ளவும்

பெயரில்லா சொன்னது…

ஆரம்பிச்சூடீங்களா!

இம்புட்டு நல்லாவராய்யா நீறு?

தினமும் தண்ணி அடிச்சு 100 200 னு செலவு பண்ணுரது தப்பு தானே
அதை சொல்றது.

500 1000 கு டிக்கெட் விக்கிறது தப்பு தான் அதை போலீஸ் லே சொல்றது.

பால் ஆபிசேகம் பண்ணறது தப்பு தான் அங்க போய் இதெல்லாம் பண்னாதீங்கனு சொல்றது.

அதுவெல்லாம் முடியாது சும்மா ஒக்கார்ந்த இடத்தில் இருந்து கிட்டு,
ரஜினி, AVM எல்லாம் சம்பாதிக்கிறாங்க மத்த எல்லாரும் நாசமா போரிங்க னு சொல்ல வேண்டியது.

சென்னை 600028, எப்பெடி தைரியமா பண்ணாங்க?
இப்போ தமிழிலே படமே release பண்ண கூடாதுணு யாரும் சொன்னாங்களா? Daily news paper கொஞ்சம் படிங்க, படங்கள் release ஆகிட்டு தான் இருக்கு.
தைரியம் இல்லாதவனுக்காக நீங்க ஏன் வருத்த படுறீங்க.

மனுசனுக்கு எது சந்தோசமோ அதுக்கு செலவு பண்ண தான் செய்வான்.

எனக்கு ரஜினி படம் பார்க்க சந்தோசம். நான் செலவு பண்றேன்.

வர்ட்டா.

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
ஆரம்பிச்சூடீங்களா!

இம்புட்டு நல்லாவராய்யா நீறு?

தினமும் தண்ணி அடிச்சு 100 200 னு செலவு பண்ணுரது தப்பு தானே
அதை சொல்றது.
//

அனானி அண்ணா,

உங்களைச் சொல்லவில்லை அண்ணா...சீக்கிறம் போய் பாலுக்கு ஆர்டர் கொடுங்க... ஒரு லிட்டர் 100 ரூபாய் வரைக்கும் ரிலிஸ் அன்று டிமாண்ட் இருக்குமாம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//balachandar muruganantham said...
இப்படி வைத்துக்கொள்ளலாம். சிவாஜி படம் வெளியிட்டால் என்ன. வெளியிடாட்டி என்ன. தங்கர்பச்சான் அவரது படத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தால், அவரது படம் சிவாஜியை விட நன்றாக வசூல் செய்யும். அவருக்கும் அவரது தயாரிப்பாளருக்கும் அந்த நம்பிக்கை இல்லை.

காலம் இதற்கு நன்றாகவே கடந்த காலத்தில் பதில் சொல்லியுள்ளது.
ஆளவந்தான், பாபா போன்ற படங்கள் ஈத்து போட்டு மூடப்பட்டன. படம் எடுப்பது, அது வியாபாரம். அப்படி தான் இருக்கும். மற்றவங்களை பற்றி கவலைப்படாமல் தான் செய்கின்றவற்றை நல்ல படியாக செய்தால் எல்லாம் நல்லதாக நடக்கும். அதற்கு யாரையும் குற்றம் கூற இயலாது.

பாலச்சந்தர் முருகானந்தம்
http://tamil.balachandar.net
//

பாலசந்தர்,

ரஜினியின் பாபா கூட 10 நாள் ஹவுஸ் புல்லாத்தான் ஓடியதாம். சிறுபட்ஜெட் படங்கள் அந்த நேரத்தில் வெளியானால் பனால் தான்... லேட் பிக்கப் படங்கள் மிக மிக குறைவே... அதற்கும் திருட்டு விசிடியே கிடைத்துடும். அதனால் 'தங்கர்பச்சான் அவரது படத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தால், அவரது படம் சிவாஜியை விட நன்றாக வசூல் செய்யும்' என்பது கேட்பதற்கு நல்லா இருக்கு.

:)))))))

பெயரில்லா சொன்னது…

// சீக்கிறம் போய் பாலுக்கு ஆர்டர் கொடுங்க... ஒரு லிட்டர் 100 ரூபாய் வரைக்கும் ரிலிஸ் அன்று டிமாண்ட் இருக்குமாம் //

என்ன இப்பிடி சொல்லிட்டீங்க.

சிவாஜி யை வைத்து பால் கடை காரர் லாபம் பார்க்கிறார், ரசிகர்களின் பணத்தை சுரண்டுகிறார்.

ரிலிஸ் அன்று பாலுக்கு டிமாண்ட் இருக்கும் என்பதால் காப்பி, டீ ஆகியவை நிறுத்தி வைக்க பட்டு இருக்கின்றன.

இதனால் காப்பி, டீ குடிப்பவர்கள் முகுந்த சிராமத்திற்கு உள்ளாகின்றனர்.

ரஜினி பேசாமல் இருந்தால் -
இவர் ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது தானே என்று சொல்வது.

ரஜினி - எந்த இடையூறும் பண்ணாதீர்கள் என்று சொன்னால் -
இவர் வேசம் போடுகிறார், ரசிகர்களை இவ்வாறு செய்ய தூண்டுகிறார் என்று சொல்வது.


சிவாஜி சும்மா தான் இருக்கார்.

நீங்க தான் அத பற்றி பேசி பூச்சாண்டி யாக ஆக்குகிறீர்கள்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

Unknown சொன்னது…

இதுபோல அதிக விளம்பரப்படுத்தும் படங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம் அல்லது குறைந்த படசம் தள்ளிப்போடலாம். நான் அப்படித்தான்.
அதிலென்ன, பெரியார் படம் போல மக்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவைகள் வரப்போகிறதா? அல்லது என்ன பெரிய கருத்தை சொல்லவா போகிறதா? வெறும் நேரம் போக்கு படங்கள்.

Subramanian சொன்னது…

சூன்15 முதல் தமிழ் மக்களின் சட்டைப் பாக்கெட் தினசரி மூன்று வேளை--சனி ஞாயிறு
நான்கு வேளை கொள்ளையடிக்கப்படும்.

bala சொன்னது…

//அவரது படம் சிவாஜியை விட நன்றாக வசூல் செய்யும்' என்பது கேட்பதற்கு நல்லா இருக்கு.//

ஜீகே அய்யா,
இதுல கேட்பதற்கு நல்லா என்ன இருக்கு என்பதை விளக்கமா சொல்லுங்கய்யா.என்னைப்போன்ற தொண்டன் கட்சி கொள்கைய உள்வாங்கி பணி ஆற்ற உங்கள் விளக்கங்கள் மிகவும் உதவுகின்றன.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
இதுபோல அதிக விளம்பரப்படுத்தும் படங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம் அல்லது குறைந்த படசம் தள்ளிப்போடலாம். நான் அப்படித்தான்.
அதிலென்ன, பெரியார் படம் போல மக்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவைகள் வரப்போகிறதா? அல்லது என்ன பெரிய கருத்தை சொல்லவா போகிறதா? வெறும் நேரம் போக்கு படங்கள்.
//

சுல்தான் ஐயா,

நல்ல யோசனை, இது போல் விளம்பர(படுத்தும்) படங்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் போலும் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//sksanu said...
சூன்15 முதல் தமிழ் மக்களின் சட்டைப் பாக்கெட் தினசரி மூன்று வேளை--சனி ஞாயிறு
நான்கு வேளை கொள்ளையடிக்கப்படும்.

8:14 PM, May 29, 2007
//

வாங்க SK SANU or SKS ANU ?

முதன் முறை வந்திருக்கிறீர்கள். வருக வருக !

கோவி.கண்ணன் சொன்னது…

bala said...
//அவரது படம் சிவாஜியை விட நன்றாக வசூல் செய்யும்' என்பது கேட்பதற்கு நல்லா இருக்கு.//

//ஜீகே அய்யா,
இதுல கேட்பதற்கு நல்லா என்ன இருக்கு என்பதை விளக்கமா சொல்லுங்கய்யா.என்னைப்போன்ற தொண்டன் கட்சி கொள்கைய உள்வாங்கி பணி ஆற்ற உங்கள் விளக்கங்கள் மிகவும் உதவுகின்றன.

பாலா
//

பாலா ஐயாவுக்கு எப்படித்தான் மூக்கில் வேர்கிறதோ தெரியல... தேடித்தேடி வர்ரீங்க ! நன்றி !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சட்னிவடை said...
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்று ரஜினிக்குத் தெரியும்!
//

சரி இன்ஸ்பெக்டர் சுரைக்காயை வாங்கச் சொல்லுவோம் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆகா...சிவாஜிக்கு இப்படி ஒரு விளக்கமா?
//


KRS,
வருக வருக ...நன்றி நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
சூப்பர் ஸ்டார் வாழ்க !

:))
//

விஎஸ்கே ஐயா,

படம் பஞ்சராகம இருந்தால் தான் ஏவிஎம்மே வாழமுடியும் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மருதநாயகம் said...

அப்படியே பீர் பாட்டில்களையும் வாங்கி வைத்துக் கொள்ளவும்//

மருதநாயகம்,
நான் குடிமக்களுக்குச் சொன்னேன்...நீங்க குடிமகன்களுக்குசொல்லுகிறீர்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்