பின்பற்றுபவர்கள்

2 நவம்பர், 2007

இந்துமதம் சநாதன தர்மத்தில் இருந்து வந்ததா ?

இந்து என்ற சொல்லில் பலர் புல்லரித்துத்தான் போகின்றனர். ஆனால் அதில் இருக்கும் செல்லரிப்பைப் ஏன் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள், அல்லது மறுக்கிறார்களா ? என்று தெரியவில்லை. இந்து மதம் எப்போது தோன்றிய கேள்விக்கு அது வெள்ளைக் காரர்களிடமிருந்தே 17 ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியது என்றே சொல்ல முடியும். ஆம் இந்து என்ற பொதுப்பெயர் சூட்டியது வெள்ளையர்தான். எனவே வெள்ளைக்காரர்களால் தோற்றுவிக்கப்பட்ட / அறியப்பட்ட மதமே 'இந்து மதம்' என்றே சொல்ல முடியும். அதற்கு முன்பு இந்தியாவில் மதங்களே இருந்ததே இல்லை. பல்வேறு வழிபாட்டு முறைகளும், அதற்குரிய நம்பிக்கைகளும் தனித்தனியாக சமயம் என்ற கோட்பாடாக அறியப்பட்டதேயன்றி மதம் என்ற சொல் இந்திய நாடெங்கும் மற்றும் தமிழகத்தில் சங்க இலக்கிய காலம் முதல் 17 ஆம் நூற்றாண்டுவரை சமயங்கள் என்றே அறியப்பட்டன. அவற்றை பிரித்து அறிய தெரியாத வெள்ளையன் இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் சமயங்கள் அனைத்தும் ஒன்றில் இருந்து தோன்றியதாக நினைத்து பொதுப்பெயரில் இந்து மதமய(க்க)மாக்கப்பட்டது.

அதற்கு முன்பு இந்துமதத்தின் முன்னோடியாக இருந்தது சநாதனதர்மம் என சொல்லப்படுவது பொது சமயமாக இருந்ததா ? என்று பார்த்தால் என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்தியாவில் வழங்கப்பட்ட சமயங்களில் அதுவும் ஒன்று. அது முழுக்க முழுக்க ஆரிய சார்புடையது. ஆரியர்கள் அல்லாதவர்களுக்கு ரிக் - முதல் அதர்வண வரை உள்ள வேதங்களில் எந்த செய்தியும் இல்லை. வடமொழி வேதங்கள் முழுக்க முழுக்க ஆரிய சடங்குகளையும் இந்திரன், சோமன், பிரகஸ்பதி என ஆரிய முன்னோர்களை போற்றி வணக்கம் செலுத்துபவை. இந்த சானாதன சமயம் தான் இந்திய சமயங்களுக்கு முன்னோடி என்பதெல்லாம் கட்டுக்கதை. மாறாக சனாதன சமயத்தை சைவ கொள்கைக்கும், உருவ வழிபாட்டு கொள்கைக்கும் மாற்றியது எவை என்று பார்த்தால் தென் இந்தியாவில் வழங்கிய சைவ சமய(சிவன், மால், முருகன் வழிபாட்டு) முறைகளும், வட இந்தியாவில் செழித்திருந்த பெளத்தமும் சமணம், ஆசிவகம் இன்னும் பிற.

கட்டுக்கதைகள், மற்றும் அவதார கதைகள் மூலம் இந்திய சமயங்கள் வேதவழி சமயங்கள் போல் காட்டப்படுகின்றன. வேதங்கள் இறைவனால் வகுக்கப்பட்டது, தோற்றமில்லாதது என்று சொல்லிய காலம் தற்பொழுது இல்லை. வேதத்தில் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் முழுக்க முழுக்க உண்மை. வரலாற்றில் நடந்தவை. அவை வரலாற்றுக்கு முற்பட்டவை அல்ல. வேதத்தில் குறிப்பு இல்லாவிட்டால் சரஸ்வதி நதியை பற்றியோ, பழங்கால இந்திய பழங்குடியினரின் நாகரீகம் பற்றியோ, இந்திரன் அணையை திறந்துவிட்டு அவர்களை அழித்தது பற்றியோ நமக்கு ஒரு செய்தியும் கிடைத்திருக்காது. வரலாற்றை மறைக்காமல் எழுதி இருக்கிறது என்பதற்காக வேதங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை, போற்றப்பாட வேண்டியவை மேலும் அனைவராலும் படிக்கப்பட வேண்டியவை :)

அத்வைதம் வேதம் சார்ந்தது ஆனால் அதன் தத்துவம் எங்கிருந்து வந்தது ? புத்தர் அருளிய நிர்வாண தத்துவத்தின் நெகட்டீவ் பதிப்பே அத்வைதம். புத்தர் சூனியம் (ஏதுமற்றது) என்று சொன்னதை அத்வைதம் எங்கும் இருப்பது என்கிறது.

வேத காலத்தில் பெண் ரிஷிகள் இருப்பதாக வேதத்தில் சொல்கிறார்கள். பெண் தெய்வங்கள் எதுவுமே இருந்ததில்லை. உருவவழிபாடு, பெண் தெய்வங்கள் இவையெல்லாம் சமண / பெளத்த சமயத்தில் போற்றப்பட்டவை. அதன் பிறகே சநாதன சமயத்தில் பெண் தெய்வ வழிபாடும் தோன்றியது.

சநாதன சமயம் என்று ஒன்று இருந்தது ஒப்புக் கொள்ள வேண்டியவை தான். ஆனால் அது தற்போது முற்றிலும் உரு இழந்துவிட்டது. மேலும் சாநதன சமயமே இந்நாள் இந்துமதம் என்று சொல்வதும், அதிலிருந்தே இந்திய சமயங்கள் தோன்றியது என்று சொல்வதெல்லாம் சமய வரலாறுகள் தெரியாதவர்களின் / மறைப்பவர்களின் பிதற்றல்கள்.

சமஸ்கிரதமே திராவிட மொழிகளுக்கும், தமிழுக்கும் மூலம் என்று கட்டுகதை கட்டியது போல் தான் சநாதன தர்மம் என்பது இந்துமதத்தின் பழைய பெயர் என்பதும்.

இந்துமதம் என்பது இந்திய சமயங்களுக்கு வழங்கப்படும் பொதுப்பெயர் மட்டுமே. இந்து என்று பெருமை பட்டுக் கொள்ளுபவர்கள் எவரும் அதற்குள் தாங்கள் சார்ந்துள்ள சமயங்களில் இருக்கும் நல்லதை எடுத்துக் கொள்ளலாம். இந்து என்பதற்காகவே அதில் உள்ள பல்வேறு சமயங்களில் உள்ள குப்பைகளை போற்றி பாதுக்காவேண்டும் என்பது தேவையற்றது என்று நினைக்கிறேன். குப்பைகள் சேர்வதும் அதை துடைத்தொழிப்பதும் வேதகாலத்திற்கு பிறகு தொன்று தொட்டு நடப்பவைதான். இந்து மதத்தில் குறைகளை பிற மதத்தினர் சுட்டிக் காட்டும் போது உணர்ச்சி வசப்பட வேண்டியது தேவை இல்லை என்றே நினைக்கிறேன். இருப்பதைத்தானே சொல்கிறார்கள். நாம் இந்து என்பதற்காக அதில் உள்ள குப்பைகளை(யெல்)லாம் ..மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அதை மறைத்து அதற்கு மாற்றாக தத்துவ விளக்கம் செல்ல வேண்டுமா ? அப்படி செய்தால் குப்பைகள் மக்கிய குப்பைகளாகவே இருக்குமேயன்றி முற்றிலும் மறையாது.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

//மேலும் சாநதன சமயமே இந்நாள் இந்துமதம் என்று சொல்வதும், அதிலிருந்தே இந்திய சமயங்கள் தோன்றியது என்று சொல்வதெல்லாம் சமய வரலாறுகள் தெரியாதவர்களின் / மறைப்பவர்களின் பிதற்றல்கள். //

:-))

இன்று இல்லை என்பதற்காக அது நேற்றும் இருந்தது இல்லை என்று சொல்லமுடியாது. ஆனால் பழைய கதைகளையும் புத்தகங்களையும் பிடித்து தொங்கிக்கொண்டு இருக்காமல் இன்று என்ன உள்ளது என்பதைப் பார்க்கவும் வேண்டும்.

வரலாறு என்பது கடந்த காலம். கடந்தகாலத்தை அறிவது நிகழ்காலத்தை புரிய உதவும். ஆனால் நிகழ்காலத்திற்கு ஏற்ற புதிய வரைமுறைகள் தேவை. வீசை-யில்தான் எடையை இன்னும் குறிப்பேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

1.சனாதனம் என்ற ஒன்று தெளிவாக கட்டமைக்கப்பட்ட ஒன்று.

2.இந்தியாவில் நிறுவனமயமாக்கப்படாத மற்ற எல்லா வழிபாடு முறைகளையும் கூட்டாஞ்சோறு போல "இந்து" என்று வெள்ளைக்காரன் வகைப்படுத்திவிட்டார்கள்

எல்லாம் சரிதான்.

இந்து = சனாதனம் + பிற நிறுவனமயமாக்கப்படாத மத முறைகள் என்றே நீங்கள் சொல்வதாகக் கொண்டால் ,நிகழ் காலத்தில் இருக்கும் சாதிய முறைகளுக்கு விளக்கம் கொடுக்க முடியுமா?

இந்தி மதம் என்பது பல பரிணாமங்களை கொண்ட ஒன்று . தட்டையாக இதுதான் அது என்று ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் அடைக்க முடியாது.

தாய் என்ற அளவுகோளில் அன்பானவளாக இருக்கும் ஒருவள் , மாமியார் என்ற அளவுகோலில் வித்தியாசமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

உங்களின் சென்ற பதிவில் நான் எடுத்துக் கொண்டது சாதிகள் மற்றும் இந்து மதம் மட்டுமே.

சாதி என்ற அளவுகோலில் , இந்து என்ற வட்டத்தில் வரும் அனைவரும் (நிகழ்காலத்தில்) தெரிந்தோ தெரியாமலோ சனாதனக் கோட்பாடுகளை ஏற்றுள்ளார்கள் , அப்படியே வாழ்ந்தும் வருகிறார்கள் என்பதை ஒத்துக் கொள்வீர்களா ?

அப்படி ஒத்துக் கொண்டால் சாதி என்ற பார்வையில் இந்து என்பது சனாதனமே. இதையே நான் "பிறப்பின் வழிவந்த ஏற்றத் தாழ்வுகள் (சாதிக் கொடுமைகள்)- பார்ப்பனிசம் என்றேன்"

**

உங்களிடம் இந்த விவாதம் (உரையாடல்??) மதம் சார்ந்த சிறுபான்மையினரின் அரசியல் சலுகைகளுக்கு ஒருவித பெரும்பான்மை தேவைப்படுகிறது என்று சொல்லும் போது வந்தது.

இஸ்லாமியர்களைவிட புத்த மதத்தினர் இந்தியாவில் சிறுபான்மைதான் . அம்பேத்கார் வழியில் தலித்துகள் பலர் அதில் இணைந்து இருந்த போதும் ஏன் அவர்களின் முன்னேற்றம் பற்றி யாரும் பேசுவது இல்லை. .. என்று சிந்தித்துப் பாருங்கள்.

சிறுபான்மை என்ற அரசியல் பலன் அடைய, வேறு சில பெறும்பான்மை விசயங்கள் தேவை என்பது புலப்படும். அதற்காகவே நரிக்குறவர் உதாரணம் சொன்னேன். அதில்தன நீங்கள் பார்ப்பனிச விவாதத்திற்கு வித்திட்டீர்கள். :-))

டிஸ்கி:
புத்த மதம் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. அது சந்தி சிரிப்பது அனைவருக்கும் தெரியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

பலூன் மாமா அவர்களே,

விரிவான சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி. மறுக்க நினைக்கவில்லை. மாறுப்பட்ட மறுமொழியை பிறகு எழுதுகிறேன். இது நன்றி பின்னூட்டம் மட்டுமே.

Unknown சொன்னது…

//மாறுப்பட்ட மறுமொழியை பிறகு எழுதுகிறேன். இது நன்றி பின்னூட்டம் மட்டுமே.//

கோவி,
நிச்சயம் உங்களுக்கு (யாருக்கும்) ஒரு மாற்றும்பார்வை இருக்கும். வித்தியாசங்களை ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ புரிந்து கொண்டால் போதும்.
agree to disagree :-))

TBCD சொன்னது…

ஹல்லோ...என்னை மிஸ்டர்.குழப்பாவதி என்று சுட்டியதை நான் கண்டிக்கிறேன்...
நான் குழம்பியவாதி..(வியாதி இன்னு ஆகலையின்னு நான் நினைக்கிறேன்...)...

அப்பறம் இந்த குழப்பத்திற்கு இந்த மாதிரி நீங்க எழுதுகிற பதிவுமொரு காரணம் என்று இவ்வேளையிலே சொல்ல கடமைப்பட்டுள்ளேன்..

நன்றி ! வணக்கம் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்