பின்பற்றுபவர்கள்

12 மே, 2008

சென்னையில் ஒரு நிகழ்(வு) 'காலம்' !

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு எழுதி என்னத்த சாதித்தோம் ? என்று நினைத்துப்பார்த்தால்,

எந்த இலக்கின்றியும், எதைதையோ 600 இடுகைகள் வரை எழுதி கூகுளின் இலவச இடத்தை நிறைத்தாயிற்று. பள்ளிச் சுற்றுலா சென்று வந்ததைப் பற்றி ஒருபக்கக் கட்டுறை எழுதத் திணறிய என்னாலும் எழுத முடிகிறது என்று நினைக்கும் போதே எவராலும் எழுத முடியும் என்றே என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

இதுவரை 30க்கும் மேற்பட்ட பதிவர்களை சந்தித்திருக்கிறேன். 10 பதிவர்கள் வரை வெகு நெருக்கமாக பழகி இருக்கிறேன். மற்றவர்களிடம் நல் நட்பு தொடர்கிறது. பதிவில் எழுதுவதால் நான் கண்ட பலன், சாதி மதம் , வயது, பாலினம் கடந்து தமிழர்கள் என்ற அடையாளத்துடன் நிறைய தமிழர்களின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. எழுதாமல் இருந்திருந்தால் இவையெல்லாம் கிடைத்திருக்காது. புலம்பல்கள், அழுகாச்சி காவியங்கள், ஆற்றமைகள், பாதித்தது, படித்தது, மகிழ்ந்தது என எல்லாவற்றையும் நாட்குறிப்பேட்டில் எழுதுவது போல் திறந்த புத்தகமாக எழுதுகிறோம். ஒத்த அலைவரிசை உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்கிறோம். எதற்கெல்லாம் எதிர்ப்பு, எதெற்கெல்லாம் ஈர்ப்பு இருக்கிறது என்று அறிகிறோம். சமுகத்தின் சவால்கள், திணறல்கள், மாற்றங்கள் குறித்து நம்மால் எந்த மூலையில் இருந்தும் அதுபற்றி சொல்ல முடிகிறது.

இதில் எதும் லாபமா ? இந்த காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள் இவைபற்றி என்னவிதமாக கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள் என வருங்காலத்தினர் தெரிந்து கொள்வதற்கான பதிப்பாக நமது எழுத்துக்கள் இருக்கும். மற்றபடி லாபம் நட்டம் பார்க்காது நமக்கு மகிழ்வு தருவதாக நட்புகள் கிடைக்கின்றன், பலவற்றைப் பற்றி கலந்து பேச (விவாதம் செய்ய) முடிகிறது. எழுத்து என்னும் ஊடகத்தில் சார்பு நிலையில் எழுதவில்லை என்று எவருமே சொல்லிக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன். அவரவருக்கு ஏற்புள்ள தளங்களில் அவரவரது எழுத்துகள் பயணிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் புலம்பல்களும், அதிகாரவர்கத்தின் ஆளுமையும் என்றுமே இருக்கக் கூடியவை. பொதுத்தளத்தில் இலக்கியம் தவிர்த்து கட்டுரைகளை வைப்பவர்கள் சார்ப்பு, சார்பற்ற இந்த இரண்டில் ஒருவராகவே இருப்பார்கள். இது அவரவரது நிலைப்பாடு இதைத் தவிர்த்து தனிமனிதர்களின் எழுத்தினால், ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் ஆனால் அது அவர்களுக்குள்ளே வளர்த்துக் கொண்ட பகைமையோ, புரிந்துணர்வு இல்லாமையோ அல்லது மனநிலை பிறழ்வதால் ஏற்படுவதாகவேத் தான் இருக்க முடியும்.

ஒரளவு இவ்வகை புரிந்துணர்வு இருப்பதால் பதிவர்கள் எவரையும் தனிப்பட்ட எதிரியாக நான் நினைப்பதில்லை. அறியாமையில் என்னைப்பற்றி அப்படி நினைப்பவர்கள் பற்றி நான் கவலைப்படுவதில்லை. சென்னை பதிவர் சந்திப்புக்கு வருபவர்களை சந்திக்க நானும் ஆவலுடன் இருக்கிறேன்.

வரும் மே 18 ஆம் தேதி மாலை 6.00 - 7.30 சென்னையில் பதிவுலக பரந்தாமன் பாலபாரதி மற்றும் பதிவுலக தன்னிகரில்லா அஞ்சநெஞ்சன், பதிவெழுத்துகளால் முடிசூடா மன்னன் லக்கியாருன் சந்திப்போம்.

என்னிடம் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள் பின்னூட்டத்தில் தொலைபேசி எண்களை தெரிவித்தால் தொடர்பு கொள்வேன். தொலைபேசி எண்களை பின்னூட்டத்தில் வெளி இடவேண்டாம் என்றால் அதைக்குறிப்பிடுங்கள்

10 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

goodluck

எல்லாரையும் அன்போடு விசாரிச்சதாச் சொல்லுங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
goodluck

எல்லாரையும் அன்போடு விசாரிச்சதாச் சொல்லுங்க.

1:36 PM, May 16, 2008
//

துளசி அம்மா,

ஆசிக்கு மிக்க நன்றி !

feedjit ல் நியூசிலாண்ட் என்று படிப்பவர்களின் நாட்டின் பெயர் வந்ததுமே, உங்களிடம் இருந்து முதல் பின்னூட்டம் வரும் என்று நினைத்து மெயிலைத் திறந்தால் வந்திருக்கிறது !
:)

ஜெகதீசன் சொன்னது…

//
எல்லாரையும் அன்போடு விசாரிச்சதாச் சொல்லுங்க.
//

அப்படியே எல்லாரையும் நானும் விசாரித்ததாகச் சொல்லவும்

Thamizhan சொன்னது…

வாழ்த்துக்கள்.அன்று எழுதிய புலவர்கள் இன்று நாம் இலக்கியம் என்று படிக்கப் போகிறோம் என்றா படைத்தார்கள்.
இன்று எளிமையாக எண்ணலாம்,காலந்தான் பதில் சொல்லும்.
தமிழர்களே தமிழுக்காகப் போராடிய வரலாற்றில் "தமிழ் வாழ்க" என்போருக்கும் தமிழை எப்படியும் வளர்ப்போம் என்று இணையத்திலேயே
வாழ்ந்து வளர்த்து வரும் தங்களைப் போன்றோருக்கும் உள்ள வேறு பாட்டை உணர்த்தும்.
மீண்டும் வாழ்த்துக்கள்.

TBCD சொன்னது…

உண்மையில் சென்னையில் பதிவர் சந்திப்பு நிகழ்த்துவதில் கோவியாருக்கு வருத்தம் தான்.

தனி தனியாக சந்தித்தால் ஒரு பதிவர்க்கு ஒரு பதிவு என்ற விகிதத்தில் பதிவு போட்டு கலக்கலாம்.

சந்திப்பு என்றால் அதிகப்பட்சம் இரண்டு தான் இதுவரை.

அதனால், அவரது கலக்கத்தை போக்குமாறு, பல் வேறு மூலை முடுக்குகளிலிருந்து அழைப்பு வைத்து,தனி சந்திப்புகள் நடக்க வேண்டும் என்று கேட்டுக் "கொல்லுகிறேன்"..

லக்கிலுக் சொன்னது…

சிங்கார சென்னைக்கு வருக வருக வருகவென இருகரம் கூப்பி வரவேற்கிறேன்! :-)

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

வருக வருக சென்னைக்கு.! பதிவர் சந்திப்பிற்கு அவசியம் வர முயல்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜெகதீசன், தமிழன், டிபிசிடி, லக்கிலுக் மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர் ஆகியோருக்கு நன்றி !

கிரி சொன்னது…

//எதற்கெல்லாம் எதிர்ப்பு, எதெற்கெல்லாம் ஈர்ப்பு இருக்கிறது என்று அறிகிறோம்//

சரியா சொன்னீங்க ;)

//எவரையும் தனிப்பட்ட எதிரியாக நான் நினைப்பதில்லை//

அப்படி இருந்தால் நண்பர்களே கிடைக்காது, சரியான முடிவு தான். குற்றம் கண்டின் சுற்றம் இல்லை

ரூபஸ் சொன்னது…

எல்லாரையும் அன்போடு , நானும் விசாரிச்சதாச் சொல்லுங்க.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்