பின்பற்றுபவர்கள்

22 செப்டம்பர், 2008

நீர்த்துப் போன பெரியார் கொள்கைகளில் ஒன்று - திருமணம் !

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. -பெரியார்

'நச்' என்று சொல்லி இருந்தாலும், சமூகம் என்கிற அமைப்பின் மீது பெருமதிப்பு வைத்திருக்கிறவர்களுக்கு பெரியாரின் இந்த கருத்து ஏற்புடையதாக இருக்காது. மாறாக திருமணம் செய்து கொள்ளாமல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதைச் சரி என்கிறாரோ என்ற கற்பனையெல்லாம் வளர்த்துக் கொள்வார்கள், மேலும் குழந்தை குட்டிப் பெற வேண்டாம் என்று சொல்வது அபத்தத்திலும் அபத்தம், இப்படி எல்லோரும் இருந்துவிட்டால் உலகம் உய்விக்குமா ? என்று கவலைப்படுவார்கள், என்னமோ பெரியார் சொல்வதினால் உலகமே ஒரு நாளில் மாறிவிடப் போவது போல் நினைக்கும் இவர்களின் அச்சம் நகைப்புக் கிடமானது தான்.

*****

பெண்களை இந்திய சமூகம் குறிப்பாக நடுத்தரவர்கம் ஒரு அடிமை போன்று தான் நடத்தி வந்தது, 50 ஆண்டுகளுக்கு முன்பு இரு / பல பெண்களை மணந்து கொள்ளும் பழக்கம் பரவாலாக இருந்தது, பெண்களை உடல் உறவு இச்சைக்காகவும், வாரிசுக்களை உருவாக்கும் எந்திரமாகவே வைத்திருந்தார்கள், எல்லோரையுமா ? எல்லோரையும் அல்ல, விழுக்காட்டு அளவில் வதைபடும் பெண்கள் எண்ணிக்கை மிகுதி. மற்ற பெண்களுக்குக் கிடைத்த சுதந்திரம் கூட அவளின் கணவரின் தாரள மனசுதான் காரணம், சமூக அமைப்பு அல்ல. பெண்களுக்கு இயல்பான சுதந்திரம் இருக்கவில்லை, வீட்டோடு இருக்கும் வேலைக்காரியாக நடத்தப்படுவதும் இல்லாமல் கூப்பிடும் போதெல்லாம் அவளது சுய விருப்பு வெறுப்பு இன்றி அவனை மகிழ்விக்க வேண்டும், அன்றைக்கு குடும்பக் கட்டுப்பாடு முறை இல்லாததால் அவளுக்கு மாதவிலக்கு நிற்கும் வரை குழந்தைகளைப் பெற்றுப் போட்டு ஆகவேண்டும் என்பது அவளது தலையெழுத்தாகி இருந்தது.


60 ஆண்டுகளுக்கு முன், என் அம்மா படிக்க விரும்பிய போது "கட்டிக் கொடுத்தால் சட்டிப்பானை கழுவ போற ஒனக்கு, படிப்பு எதுக்கு, சமையலை மட்டும் கற்றுக் கொள் போதும்" தாத்தாவின் கண்டிப்புடன் மூன்றாம் வகுப்போடு நிறுத்தப்பட்டு இருக்கிறார். பெருவாரியான ஆண்களின் மன நிலை பெண்கள் ஆண்களுக்கு பணிவிடை செய்து, அவன் விருப்பங்களை நிறைவேற்றி, அவன் வாரிசுகளைப் பெற்றுத் தந்து, இடையில் இறந்துவிட்டான் என்றால் வெள்ளை சேலை அணிந்து அவனை நினைத்து உருகிக் கொண்டே, பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும். பெண்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாகவே நினைத்துப் பார்க்க விருப்பம் இல்லாமல் இருந்தது சமூகம். இதனை கண்டு மனம் புழுங்கி, மாற்ற வேண்டும் என்பதற்காகவே பெரியார் திருமணத்தினால் பெண்கள் எப்படியெல்லாம் அடிமையாகிறார்கள் என்பதை சற்று கடுமையாகவே சொன்னார்.

1000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளிலும் கூட அதே நிலை தான் இருந்தது, ஆண்களைப் பொருத்த அளவில் பெண்கள் பெண் குழந்தைகள் மட்டுமின்றி 'ஆண் குழந்தைகளையும்' பெறுபவர்கள். வாரிசுகளை உருவாக்கிக் கொள்வதற்காக மட்டுமே பெண்களுடன் உறவு கொள்வார்களாம் ஆண்கள், மற்றபடி இச்சைகளை ஆண்கள் ஆண்களிடமே தீர்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள், கிரேக்க மேதைகள் அரிஸ்டாட்டில், பிளாட்டோ மற்றும் மாவீரன் அலெக்சாண்டர் ஆகியோர் ஓரின புணர்ச்சி யாளர்களாகவே இருந்ததற்கு அன்றைய ஐரோப்பாவில் பெண்களின் நிலை மிகவும் தாழ்வாக வைக்கப்பட்டு இருந்ததும் கூட காரணமாக இருந்திருக்கலாம். ஐரோப்பிய நாடுகள் பெண்ணடிமைத் தனத்திலிருந்து என்றோ மீண்டு இருக்கிறது.

இங்கே இந்தியாவில் பெண்களுக்கு புனிதம் சேர்பதாக அவளை லட்சுமி, சரஸ்வதி, பூமாதேவி, சக்தி, கற்புக்கரசி என்றெல்லாம் உயர்வான பெயரில் அழைப்பதாகவும், தாய்மையைப் போற்றுகிறோம் என்றெல்லாம் மிகவும் உயர்வாகக் கூறிக் கொண்டு வந்திருந்தாலும், இந்திய இளம் விதவைத் தாய்களின் நிலை உலகில் எங்கும் நடக்காத கொடுமைதான் ( அதற்கு முந்தைய காலங்களில் இந்த நிலையைக் கூட அவளுக்குக் கொடுக்காமல் கணவனின் பிணத்தோடு சேர்த்து எரித்தார்கள்.), பெண்களை இப்படியெல்லாம் வதைத்து வந்த சமூகத்தைப் திருத்துவதற்கு பெரியார் கூறிய அதிரடி கருத்துகள் எவ்வளவு பெரிய அடியைக் கொடுத்திருக்கிறது.

பெரியார் திருமணம் வேண்டாம் என்றாரே, இப்பொழுது அவரது தொண்டர்கள் கூட அவரது வேண்டுகோளை மதித்தார்களா ? தற்பொழுது பெண்கள் எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள், முன்பைப் போல் மாதவிலக்கு நிற்கும் வரை யாரும் குழந்தை பெறுவது கிடையாது, ஒன்றோ அல்லது இரண்டோ அத்துடன் நிறுத்திக் கொள்கிறார்கள், அடாவடி ஆண்களை எதிர்த்து குடும்ப நல நீதிமன்றங்களை நாடி அவனது செயலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுதலையாகி அவர்களுக்கென்ற வாழ்கையை வாழத் தொடங்குகிறார்கள், இரண்டு திருமணமெல்லாம் தற்போதைய ஆண்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி போய்விட்டது. முதல் மனைவின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு திருமணம் ஆன ஆணும் தன்விருபங்களுக்கு ஏற்ப பல பெண்களையெல்லாம் மணந்து கொள்ள முடியாது. கணவன் அன்னிய பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்றாலே அவனிடமிருந்து மணவிலக்கு பெற்றுக் கொண்டு விடுபடவும் பெண்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

தற்பொழுதெல்லாம் தப்பு செய்யும் ஆண்கள் அந்த கால ஆண்களைப் போல் வெளிப்படையா சின்னவீடு என்பது போல் ஏற்பாடு செய்து கொள்ள முடியாது. மொத்தத்தில் ஒரு திருமணம் ஆன ஆணின் பணமோ, புகழோ, பாரம்பரியமோ அவன் மனைவியை ஆட்டுவிக்கும், அடிமை படுத்தும் சாதனமாக ஆகிவிட முடியாது. தற்பொழுது தான் ஆண்கள் பெண்களும் சமுகத்தில், தனது குடும்பத்தில் சமமானவள் என்று உணர ஆரம்பித்திருக்கிறார்.

கணவன் - மனைவிக்குள்ளே இந்த அளவுக்கு புரிந்துணர்வுகள் ஏற்பட்டுவிட்டதால், பெரியார் சொன்ன திருமணம் குறித்த (மேற்கண்ட) அன்றைய கருத்துக்கள், இன்றைக்கு தேவையற்றதாகிவிட்டது. தற்பொழுது பெண்களைப் பொருத்த அளவில் திருமணம் அவளை அடிமை ஆக்குவதில்லை, பெண்களிடம் விழிப்புணர்வைக் கூட்டி, ஆண்கள் தங்களைத் திருத்திக் கொண்டுள்ள இந்த சமூக மாற்றத்திற்கு பெரியாரின் அதிரடி கருத்துக்களும் ஓரளவு காரணமாக இருந்து, எந்த ஒரு சமுக சீர்திருத்தவாதியாக இருந்தாலும் அவரது சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் சாகாவரம் பெற்றவை அல்ல, அவை தேவை எனும் போது ஏற்படும், அதன் தேவை முடிந்ததும், அவைகளின் வலியுறுத்தல்கள் கூட தேவை இல்லாமல் போய்விடும். மற்ற மாநிலங்களிலும் இந்த மாற்றம் இருக்கிறது என்றாலும், தமிழகத்தில் இந்த மாற்றம் விரைவாகவே நடைபெற்றது.

10 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஒரலுக்கு ஒரு பக்கம் இடிங்கண்ணா!

மத்தலத்துக்குங்கண்ணா.......?

கோவி.கண்ணன் சொன்னது…

ஒரலுக்கு ஒரு பக்கம் இடிங்கண்ணா!

மத்தலத்துக்குங்கண்ணா.......?

தற்பொழுது பெண்களைப் பொருத்த அளவில் திருமணம் அவளை அடிமை ஆக்குவதில்லை, அப்போ ஆண்களுக்கு ? :) - என்று போட்டுவிட்டு எடுத்துவிட்டேன். நீங்கள் சரியாக பாயிண்டை பிடிச்சிட்டிங்க. :) அது வேற பாலிடிக்ஸ்.

Blogger சொன்னது…

நல்லதொரு கட்டுரை...

திருமணங்கள் தேவையா என்று நான் எழுதிய கட்டுரை இதோ..

http://pudhiyayugam.blogspot.com/2008/09/blog-post_19.html

முடிந்தால் அதையும் படித்துப் பாருங்கள்...

கோவி.கண்ணன் சொன்னது…

The Rebel said...
நல்லதொரு கட்டுரை...

திருமணங்கள் தேவையா என்று நான் எழுதிய கட்டுரை இதோ..

http://pudhiyayugam.blogspot.com/2008/09/blog-post_19.html

முடிந்தால் அதையும் படித்துப் பாருங்கள்...
//

உங்கள் பதிவுக்கு, எனது பின்னூட்டம்,

வெளி நாடுகளில் லிவ் டுகெதர் பாலிசி வந்துவிட்டது, இந்தியாவிலும் வந்து கொண்டு இருக்கிறது, சமூக சிந்தனைகள் மாறும் போது அமைப்பும் மாறும், அது போரடித்துவிட்டால் மீண்டும் பழைய சிந்தாந்தங்களைப் புதுப்பித்து அதன் வழியில் செல்வார்கள். என்னதான் சட்டையை மாற்றி மாற்றி வடிவமைத்தாலும் அதன் நோக்கத்தில் உடலை மறைப்பதும் ஒன்று என்று இருக்கிறதல்லவா ?

ஆண்கள் - பெண்கள் அனைவருமே ஒருக்காலமும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்துவிட முடியாது. அதனால் தேவையான மாற்றங்களைச் செய்து கொண்டு தேவையானபடி வாழ்கிறார்கள். எது சரி ? எது தவறு ? இதெல்லாம் தனிப்பட்ட் இருவரின் விருப்பு / வெறுப்புகளைப் பொருத்தது.

Blogger சொன்னது…

//ஆண்கள் - பெண்கள் அனைவருமே ஒருக்காலமும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்துவிட முடியாது. அதனால் தேவையான மாற்றங்களைச் செய்து கொண்டு தேவையானபடி வாழ்கிறார்கள். எது சரி ? எது தவறு ? இதெல்லாம் தனிப்பட்ட் இருவரின் விருப்பு / வெறுப்புகளைப் பொருத்தது.

கண்டிப்பாக..

தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து..

அதில் திருமணம் என்பது மட்டும் விதிவிலக்கல்ல..

TBR. JOSPEH சொன்னது…

கண்ணன்,

திருமணம்னு சொல்றது ரெண்டு பேர் அஃபிஷியலா சேர்ந்து வாழறதுக்கு ஒரு லைசென்ஸ், அவ்வளவுதான்னு நினைக்கற மனப்பக்குவம் நமக்கு வரும்னு எனக்கு தோனலை.

அது இன்னமும் சாதி,மதம், பணம்கற சிக்கல்லருந்து விடுபடலை.
அட்லீஸ்ட் நம்ம நாட்டுல. ஏன் சொல்லப்போனால் தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் அவர்கள் மத்தியில் இந்த மூன்றும் மிக முக்கியமான அம்சங்கள்.

தாலிக்கும், பூவுக்கும், பொட்டுக்கும் வழங்கப்படுகின்ற முக்கியத்துவம் ஒழிந்தால் தவிர தாம்பத்தியத்தில் பெண்ணுக்கு விடியல் என்பது வெறும் பேச்சுக்குத்தான்.

நையாண்டி நைனா சொன்னது…

அண்ணா அது நீர்த்து போனது அல்ல.....
மிகவும் பிரபலமான ஒரு வழக்காரு உண்டு..அது " Operation Success, But Patient Out".. ஆனால் " Without an operation a patient can be cured" இங்கே பெரியாரின் அந்த அடி இல்லை என்றால், இன்றும் நம் சமூகம் மட சமூகமாகவே இருந்திருக்கும். ஆனால் பெரியாரின் வைத்திய முறையை கேள்வி பட்டே ரணம் ஆறி விட்டது... சிறிது மட்டு பட்டு விட்டது
இதை ஒரு உளவியல் சார்ந்த வைத்திய முறையாக நான் பார்க்கிறேன்.
பெரியார் திருமண முறைகளில் உள்ள மூட நம்பிக்கையையே ஒருத்தார், திருமணத்தை அல்ல. ஆகவே இது நீர்த்து போன பெரியாரின் கொள்கை அல்ல, அல்ல, அல்ல என்று பதிவு செய்கிறேன்

நையாண்டி நைனா சொன்னது…

பெரியார் நினைத்திருந்தால், திருமணத்தையும் தடை செய்திருக்கலாம்... ஓசோ போல் பெரும் பொருள் ஈட்டியும் இருக்கலாம், பெரியார் சொன்னது திருமண முறை வேண்டாம் என்று அல்ல, பெண்களை அடிமை படுத்தும் திருமண முறை வேண்டாம் என்று தான். அதாவது கத்தியை எடுப்பது கொடுமையான செயல் தான் ஆனால் ஒரு மருத்துவர் எடுப்பது கொடுமையான செயலாக இருக்காது என்பது என் எண்ணம்.
தவறு இருந்தால், அதாவது நான் விளங்கிக்கொண்டது தவறு என்றால் தெளிவு படுத்தவும். என் மூலமாக பிறர்க்கும்.....

manikandan சொன்னது…

திருமணம் ஒரு பெண்ணை கட்டுபடுத்துவாதகவே இருந்து வருகிறது. சமீப காலங்களில் பெண்களுக்கு financial freedom கிடைத்து வருவதால் இது மாறி வருகிறது. ஆனால் மாற்றம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும்.

திருமணம் பற்றி பெரியாரின் தீர்க்கதரிசனம் -

என்னமோ பெரியார் சொல்வதினால் உலகமே ஒரு நாளில் மாறிவிடப் போவது போல் நினைக்கும் இவர்களின் அச்சம் நகைப்புக் கிடமானது தான்.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணே, இந்த பதிவுக்கு பின்னூட்டம் போட ஆரம்பிச்சு தட்டச்சு செஞ்சத எல்லாம் அழிச்சுட்டேன். நான் உங்ககிட்ட நேர்ல இதப்பத்தி பேசுறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்