பின்பற்றுபவர்கள்

26 டிசம்பர், 2009

அத்தை மக அருக்காணி !

கிராமத்துப் பெயர்களை திரையுலகிலும், நாடகங்களிலும் கிண்டல் அடித்து அடித்து தமிழ் பெயர்கள் சூட்டுவது கூட இழுக்கு என்பதாகி 'ஸ்', 'ஷ்','ஜ' போன்ற வட எழுத்துக்களில் தொடங்கும் வடமொழிப் பெயர்களை சூட்டுவது வழக்கமாகி இருக்கிறது. கிண்டல் அடிப்பது மட்டுமின்றி பிறந்த நேரத்து பலனாக இந்த எழுத்தில் தொடங்குங்கள் என்கிற சோதிட அறிவுறுத்தலால் மனதுக்கு பிடித்தப் பெயர்களை விட்டுவிட்டு எதையோ ஒரு பெயரை வைத்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு முன்னோர்களின் பெயரை வைத்து நினைவு கூறும் வழக்கம் கிட்டதட்ட இல்லை என்னும் நிலையில் தான் தமிழ் பெயர்கள் வழங்கி வருகின்றன.

இந்தியாவில் குடும்பப் பெயர்கள் என்பவை சாதிய அடைமொழியாகி இழிந்துவிட்டதால், தமிழக அளவிலாவது சாதிவெறியர்கள் தவிர்த்து வேறு எவரும் சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வதில்லை. சந்திரபாபு நாயுடு ஒரு பேட்டியில் நாயுடு என்கிற சாதிப் பெயரைத் தன் பெயரில் இருந்து இனி எடுக்கப் போவதாக அறிவித்தார், செயல்படுத்தினாரா என்று தெரியவில்லை. ஆனால் செய்தி இதழ்களில் சந்திரபாபு நாயுடு என்றே எழுதப்பட்டு வருகிறது. ஒருவன் திருந்தினாலும் அவனை இந்த சமூகம் திருந்தவிடாது என்பதைத்தான் செய்தி இதழ்களின் பெயர் சேவை மூலம் தெரிந்து கொள்கிறோம். சாதிய அடைமொழியை பெயரில் இருந்து நீக்கிக் கொள்வது சாதிய ஏற்றத்தாழ்வுகளால் நொருங்கிக் கிடக்கும் சமூகத்தில் வரவேற்கத்தக்கதே. உயர்சாதி என்று அழைத்துக் கொள்ளும் அனைத்து சாதி வெறியர்கள் தவிர்த்து சாதிப் பெயர் மீது விருப்பம் கொண்டவர் குறைவே. அகமுறை திருமணங்கள் ஒழிந்துவிட்டால் சாதிப் பெயர்கள் முற்றிலுமாக நீங்கும், தற்போதைய திருமண அழைப்பிதழ்களில் உயர்சாதியினர் என்று கூறிக் கொள்பவர்கள் தவிர்த்து யாரும் சாதியை அடையாளப்படுத்தி அழைப்பிதழ் அடிப்பது கிடையாது, ஒரு சில அழைப்பிதழ்களில் குல தெய்வப் பெயர் இருக்கும், அதை வைத்து சாதியைக் கண்டுபிடித்தால் தான் உண்டு.

சரி, அருக்காணிக்கு வருவோம், அண்மையில் பார்த்த வேட்டைக்காரன் படத்தில், விஜய் மேற்படிப்புக்காக சென்னை செல்கிறார், அப்போது அவர் அம்மா, அழுது கொண்டிருப்பார், ஏன் அழுகிறீர்கள் என்று விஜய் கேட்க, 'மேலப் படிக்காமல் இருந்தால் அத்தை மகள் அருக்காணியை உனக்கு கட்டிவைத்து கூடவே வைத்திருப்பேன்' என்பதாக சொல்லுவார்.

இந்தக் காட்சியைப் பார்க்கும் ஒருவரது மனதில் பதியும் எண்ணங்கள்

1. அருக்காணி என்ற பெயர் உடைய பெண்கள் படித்திருக்க மாட்டார்கள்
2. படிப்பு அறிவு, படிப்பின் பயன் தெரியாதோர் இன்னும் அருக்காணி என்ற பெயரையெல்லாம் வைப்பவராக இருக்கிறார்கள்
3. படித்தவனுக்கு படிக்காதப் பெண்ணை திருமணம் செய்து வைப்பது தவறு

மூன்றாவதாக நான் குறிப்பிட்டு இருப்பது ஞாயம் உள்ளதாகவே இருந்தாலும், ஒரு பெண் படித்தவளா இல்லையா என்பதை அவள் பெயர் சொல்லிவிடுமா ? அல்லது படித்தப் பெண்கள் பெயர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதேனும் இருக்கிறதா ? வழக்கமாக எஸ்வீசேகர் நாடகங்களில் தமிழ்பெயர்கள் மிகுதியாக கிண்டல் அடிக்கப்படும், அதையும் காசு கொடுத்துவிட்டு ரசித்து சிரித்துப் பார்த்துவிட்டு வருவோம். ஆனால் அப்பன் வைத்தப் பெயரையே எண் கனித சோதிடம் பார்த்து 'சே.வே.ஷேகர்' என்று மாற்றிக் கொண்ட எஸ்விசேகருக்கு தமிழ் பெயரைக் கிண்டல் அடிக்கும் தகுதி இருக்கிறதா என்று ஒருவரும் எண்ணிப் பார்ப்பது இல்லை. ஒருவரின் பெயர் வெற்றியை ஈட்டித்தருவதாக இருக்க வேண்டும் என்று நினைப்போர் தன் பெயரை 'சொறிநாய்' என்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சோதிடன் பரிந்துரைத்தால் அப்படியும் வைத்துக் கொள்வார்கள்.

எஸ்விசேகர் பார்பனிய சிந்தனையாளர் அவருக்கு தமிழ்பற்று இருக்க வேண்டும் என்கிற தேவை இல்லை என்றாலும் தமிழைக் கிண்டலடிக்கும் உரிமையும் இல்லை என்று நாம் எதிர்ப்பு காட்டுவதில்லை, 'அமெரிக்காவில் அருக்காணி' ஆயிராமவது முறையாக அரங்கேறினாலும் பார்த்து ரசிப்போம். ஒரு கிறித்துவரான விஜய் இந்து பெரும்பான்மையினரின் பெயராக 'விஜய்' என்ற பெயரைச் சூட்டி இருக்கும் நடிகர் விஜய் தன் படத்தில் ஒரு பெண் பெயரை கிண்டல் அடித்திருப்பதை எப்படி அனுமதித்தார் என்று தெரியவில்லை. திரைப்பட நாயகன் கிறித்துவ, இஸ்லாமிய பெயருடன் இருக்கக் கூடாது என்பதில் உறுதியுடனும், மூன்றெழுத்திலும் தேர்ந்தெடுக்கும் விஜய் உடபட பல நடிகர்கள் பிறரின் பெயரை வைத்து செய்யப்படும் காமடி அபத்தங்களை அதுவும் தம் படத்தின் வழியாக சொல்வது முரணாகவே இருக்கிறது.

பல்வேறு ஊடகங்கள் வழியாக கிண்டல் அடித்து கிராமங்களில் அருக்காணிகளே குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம், காரணம் திரைப்படங்களைப் பார்த்து பார்த்து கிராமப் பெயர்கள் எல்லாம் எப்போதோ மாறிவிட்டிருக்கிறது. எம்சிஆர் என்று பெயர் வைத்துள்ளவர்களைக் கூட நான் பார்த்திருக்கிறேன். லாவண்யா, சுப்ரியா, ஸ்ரேயா, அம்சா, தேவநாதன், புவனேஷ்வரி என்று பெயர் வைத்திருப்பவர்கள் அனைவருமே படித்தவர்கள் என்று சொல்லிவிட முடியுமா ? இன்னும் சொல்லப் போனால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் மிகுதியாக படிப்பவர்களாகவும் தேர்ச்சி விழுக்காட்டில் மிகுதியாகவும் இருக்கின்றனர். இப்போதெல்லாம் ஆண்களின் படிப்பு தகுதியைப் பார்த்து தன்னை விட மிகுதியாக படித்திருக்ககவிட்டால் நிராகரிக்கும் நிலையில் தான் இருக்கின்றனர். இன்னும் அருக்காணிகள் படிக்கவில்லை என்பதும், படிக்காதவர்கள் அருக்காணிகளாக இருக்கிறார்கள் என்பது போன்ற திரைப்பட கட்டமைப்புகள் கண்டிக்கத் தக்கதே. அதைவிட தமிழ் கிராமியப் பெயர்களை (படிக்காதவர்களின் பெயர்கள் என்பது போல்) கிண்டல் அடிக்கலாம் என்கிற உரிமையை இவர்களுக்கு கொடுத்தது யார் ?

26 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

நட்புடன், கியூரியாசிடியுடன் உங்களிடம் ஒரு கேள்வி.

உங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தீர்கள்? அருக்காணி என்னும் பெயரை தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் வீட்டினரின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
நட்புடன், கியூரியாசிடியுடன் உங்களிடம் ஒரு கேள்வி.

உங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தீர்கள்? அருக்காணி என்னும் பெயரை தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் வீட்டினரின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

உங்கள் உறவினர்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தேவ நாதன், புவனேஷ்வரி என்ற பெயர்களைப் பரிந்துரைத்தால் கிடைக்கும் எதிர்வினைக்கு குறைவாகத்தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
நட்புடன், கியூரியாசிடியுடன் உங்களிடம் ஒரு கேள்வி.

உங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைத்தீர்கள்?
//

ஏற்கனவே ஆபாசமாக பின்னூட்டமிடும் அனானிகள் என் மகளின் பெயரைச் சொல்லித் திட்டவேண்டும் என்கிற உங்கள் எதிர்'பார்ப்பாக எடுத்துக் கொள்ளலாமா ?

வாசகன் சொன்னது…

**அதைவிட தமிழ் கிராமியப் பெயர்களை (படிக்காதவர்களின் பெயர்கள் என்பது போல்) கிண்டல் அடிக்கலாம் என்கிற உரிமையை இவர்களுக்கு கொடுத்தது யார் ?**

சேகரின் அப்பாவை அவர் செய்வது உங்கள் பார்வைக்கு தவறாக இருந்தாலும் அவரை அப்பன்'என்று விளிக்கும் உரிமையே உங்களுக்கு யார் கொடுத்தார்களோ,அவர்கள்தான் அவர்களுக்கு கிண்டலடிக்கும் உரிமையையும் கொடுத்திருப்பார்கள்!

சொல்லும் கருத்தை மீறி உங்கள் மனதில் வன்மம் இருக்கிறது என்பதை உங்கள் வார்த்தைகள் உணர்த்த வில்லையா?

டோண்டுவின் கேள்விக்குப் நேரடிப் பதில் அளிக்கலாமே..

dondu(#11168674346665545885) சொன்னது…

கண்டிப்பாக குழந்தையின் பெயரைக் கூறுமாறு கேட்கவில்லை. அருக்காணி என்னும் பெயர் பற்றித்தான் பேச்சே. என்ன பெயர் வைத்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியும்தானே. ஒன்று அதை வைத்திருப்பீர்கள் இல்லாவிட்டால் வைத்திருந்திருக்க மாட்டீர்கள்.

மற்றப்படி தேவநாதன் என்னும் பெயர் கடலூருக்கு அருகிலிருக்கும் திருவகீந்திரபுரம் தலப்பெருமாளின் பெயர். முக்கால்வாசி கடலூர்காரர்கள் அந்தப் பெயரை வைத்து கொள்வார்கள். திருவல்லிக்கேணிக்காரர்கள் பார்த்தசாரதி என்னும் பெயரை வைத்து கொள்வது போல.

அதே போல புவனத்துக்கே ஈஸ்வரியாம் புவனேஸ்வரி அன்னை பார்வதியின் பெயர். ஆகவே அப்பெயர்களை வைப்பதிலும் ஒரு தயக்கமும் இல்லைதான்.

ராமசாமி என்று பெயர் வைக்கவும் பிரச்சினை இருக்காதுதான். அதே போலத்தான் தினகரன், அழகிரி எல்லாம். ராவணன் என்றே பெயர் வைத்து கொள்கிறார்கள். துரியோதனனும் விலக்கல்லவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிங்கக்குட்டி சொன்னது…

நல்ல சிந்தனை.

பெயர் என்பது நாம் விரும்பும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் அவர்கள் மனம் நோக்காதபடி இருக்குமாறு, அனைவரும் அழைக்க மற்றும் அடையாள படுத்த பயன் படும் ஒரு சொல் அவ்வளவுதான்.

இதில் கூட மதம் ஜாதி இனம் வைத்து பிரித்தது நாம் மக்கள் தான்.

"Woodbridge" என்பது சமுதாயத்தில் உயர்ந்த ஒரு லண்டன் வாசியின் பெயர். இதனால் அவர் என்ன குறைந்து விட்டார் அல்லது அவர் மொழி இனம் ஜாதி இதில் எங்கு வருகிறது?


ஒருவருக்கு பிடித்த பெயர் இன்னொருவருக்கு பிடிப்பதில்லை, அதே நேரம் ஒருவருக்கு பிடித்த, பிடிக்காத பெயரை மற்றவர்கள் விமர்சனம் செய்வதில் நியாயம் இல்லை என்பது என் கருத்து.

Unknown சொன்னது…

One more question sir, Do you think that bramins are against tamil? Actual fact is that they contributed more for the language not only that only the asthigans contributed more for all languages and cultures. The Nastigans are only making money from languages and culture

பெயரில்லா சொன்னது…

இளவேனில்
யாழினி
ஓவியா
சுடர்விழி
மலர்
எழில்
அல்லி
பொன்னி
தாமரை
தென்றல்
இதை விட என்னங்க வேணும்

priyamudanprabu சொன்னது…

சந்திரபாபு நாயுடு ஒரு பேட்டியில் நாயுடு என்கிற சாதிப் பெயரைத் தன் பெயரில் இருந்து இனி எடுக்கப் போவதாக அறிவித்தார், செயல்படுத்தினாரா என்று தெரியவில்லை. ஆனால் செய்தி இதழ்களில் சந்திரபாபு நாயுடு என்றே எழுதப்பட்டு வருகிறது. ஒருவன் திருந்தினாலும் அவனை இந்த சமூகம் திருந்தவிடாது என்பதைத்தான் செய்தி இதழ்களின் பெயர் சேவை மூலம் தெரிந்து கொள்கிறோம்.
//////

அண்ணே இன்னும் பெரியாரை "ராமசாமி நாய்கர்" என எழுதும் நாய்கள் உள்ளன
ஏன் தமிழக அரசு பாட புத்தகத்திலேயே பெரியாரின் பெயர் அப்படித்தான் உள்ளதாம்

priyamudanprabu சொன்னது…

////
ஒருவரின் பெயர் வெற்றியை ஈட்டித்தருவதாக இருக்க வேண்டும் என்று நினைப்போர் தன் பெயரை 'சொறிநாய்' என்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சோதிடன் பரிந்துரைத்தால் அப்படியும் வைத்துக் கொள்வார்கள்.
////

செருப்படி

கோவி.கண்ணன் சொன்னது…

//சேகரின் அப்பாவை அவர் செய்வது உங்கள் பார்வைக்கு தவறாக இருந்தாலும் அவரை அப்பன்'என்று விளிக்கும் உரிமையே உங்களுக்கு யார் கொடுத்தார்களோ,அவர்கள்தான் அவர்களுக்கு கிண்டலடிக்கும் உரிமையையும் கொடுத்திருப்பார்கள்!//

அப்பன், ஆத்தாள் என்று சொல்லுவது மரியாதைக் குறைவு என்று யார் சொன்னது ? அப்பன் ஞானப் பண்டிதா என்று அழைக்கும் போது மரியாதைக் குறைக்க அப்படி சொல்லுகிறார்கள் என்று பொருளல்ல. அப்படியே இல்லாவிட்டாலும் கூட தமிழ் பெயர்களை அவமானப் படுத்தும் நோக்கில் பயன்படுத்தும் சேகரை செருப்பால் அடிக்கும் உரிமையை நான் பிறரிடம் கேட்டுப் பெற வேண்டியதில்லை

//சொல்லும் கருத்தை மீறி உங்கள் மனதில் வன்மம் இருக்கிறது என்பதை உங்கள் வார்த்தைகள் உணர்த்த வில்லையா?

//

இருந்துவிட்டுப் போகிறது, 'நன்னா எழுதியிருக்கேள்' என நான் உங்களைப் போன்ற பார்பனர்களின் ஆசி பெற இந்தப் பதிவை எழுதவில்லை. புரிகிறவர்களுக்கு புரியும்

கோவி.கண்ணன் சொன்னது…

//ராமசாமி என்று பெயர் வைக்கவும் பிரச்சினை இருக்காதுதான். அதே போலத்தான் தினகரன், அழகிரி எல்லாம். ராவணன் என்றே பெயர் வைத்து கொள்கிறார்கள். துரியோதனனும் விலக்கல்லவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

மிஸ்டர் டோண்டு,

எந்தப் பெயரை எவர் வைக்கலாம் என்று அவனவன் முடிவு செய்வது தான். ஜெயலட்சுமி, ஜோதிலட்சுமி, ஜெயமாலினி போன்ற பெயரைக் கூட வைத்துக் கொள்ளலாம். நான் அதை மறுக்கவில்லை. ஆனால் அருக்காணி போன்ற பெயர்களை அவப்பெயர்கள் என்பதாக கிண்டல் அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது ?

கோவி.கண்ணன் சொன்னது…

//anand said...
One more question sir, Do you think that bramins are against tamil? Actual fact is that they contributed more for the language not only that only the asthigans contributed more for all languages and cultures. The Nastigans are only making money from languages and culture

2:03 PM, December 26, 2009
//

ஐயா, பிராமணர்களை கிண்டல் அடிக்கவில்லை, சோ போன்ற பார்பனர்கள் 'எங்கே பிராமணன்?' என்று தேடிக் கண்டுபிடித்துக் காட்டினால் சேவிக்கலாம் என்று இருக்கிறேன். இல்லாத பிராமணனை நான் ஏன் சார் கிண்டல் அடிக்கப் போகிறேன் ?

கிரி சொன்னது…

// கோவி.கண்ணன் said...
இருந்துவிட்டுப் போகிறது, 'நன்னா எழுதியிருக்கேள்' என நான் உங்களைப் போன்ற பார்பனர்களின் ஆசி பெற இந்தப் பதிவை எழுதவில்லை. புரிகிறவர்களுக்கு புரியும்//

கோவி கண்ணன் அவர் அவரோட கருத்தை கூறி இருக்கிறார்..மாற்றி கூறினால் அவர்கள் ஆசி பெறத்தான் கூற வேண்டுமா! பொதுப்படையாக கூறக்கூடாதா!

@வாசகன்.. அப்பன் என்று கூறியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை (கோவி கண்ணன் விளக்கம் உண்மையிலேயே அப்படி நினைத்து கூறி இருந்தால்)

கோவி.கண்ணன் சொன்னது…

//andhanan2009 said... //
ஐயா தேவநாதன் உறவின் முறை அந்தணன் அவர்களே, உங்கள் அம்மாவை ஆபாசமாக விளம்பரப்படுத்த இது இடம் இல்லை. உங்களைப் பெற்றத் தாயைப் பற்றி தரக் குறைவாக நீங்கள் எழுதிய உங்கள் பின்னூட்டம் நீக்கிவிட்டேன்

வீர அந்தனன் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

////வீர அந்தனன்

//

உன் தாயைப் பற்றி நீ கேவலமாக பிறர் பதிவிலும் என் பதிவிலும் எழுதுகிறாய். உன் தாயையை நீயே அவமதித்தாலும் என்னால் ஏற்க முடியாது அதனால் பின்னூட்டத்தை நீக்குகிறேன்//

வீர அந்தனன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வீர அந்தனன் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பித்தனின் வாக்கு சொன்னது…

ஆகா என்ன ஒரு ஞானம், என்ன ஒரு கண்டுபிடிப்பு, வேட்டைக்காரன் அருக்கானிக்கும், எஸ் வீ சேகர் அருக்கானிக்கும் ஒரு லிங்க் கொடுத்து, அதில் பார்பனியத்தைக் கிண்டலடிக்கும் தங்களின் பகுத்தறிவிற்க்கு ஒரு சலாம் போடனும். ஆமாம் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் தான் இந்த அருக்கானி மேட்டர் ஆரம்பித்தது. அதில் பார்ப்பன பெண் சுகாசினி தான் நடித்து இருப்பார். திட்டுவது என்று ஆரம்பித்து விட்டால் திட்ட வேண்டியதுதான.

ஆமா இது அருக்கானிக்கு மட்டும்தானா? சங்கவை,அங்கவை கிண்டல் பண்ணும் விவேக்க்கு கிடையாதா(பார்ப்பனர் அல்ல ஆதலால் விதிவிலக்கு போலும்). நன்றி. வாழ்க வளர்க இது போல பகுத்தறிவு.

கோவி.கண்ணன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

//ஆமாம் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் தான் இந்த அருக்கானி மேட்டர் ஆரம்பித்தது. அதில் பார்ப்பன பெண் சுகாசினி தான் நடித்து இருப்பார். திட்டுவது என்று ஆரம்பித்து விட்டால் திட்ட வேண்டியதுதான. //

எனக்கு தெரிஞ்சு எந்த கிராமத்துப் பெண்ணும் கம்பியை வைத்து சடை பின்னிக் கொள்வதில்லை. திரைப்படம் சித்தரித்த அருக்காணி சுகாசினி நடித்தது

//ஆமா இது அருக்கானிக்கு மட்டும்தானா? சங்கவை,அங்கவை கிண்டல் பண்ணும் விவேக்க்கு கிடையாதா(பார்ப்பனர் அல்ல ஆதலால் விதிவிலக்கு போலும்). நன்றி. வாழ்க வளர்க இது போல பகுத்தறிவு.//

அந்த பாத்திரப்படைப்புக்கு சுஜாதவை அடிச்சுக் காயப்போட்டாங்க தெரியாதா ? கூகுளில் தேடிப் பார்க்கவும்

பித்தனின் வாக்கு சொன்னது…

// அந்த பாத்திரப்படைப்புக்கு சுஜாதவை அடிச்சுக் காயப்போட்டாங்க தெரியாதா ? //
நான் படித்துப் பின்னூட்டம் இடுவதும், கருத்துக்கள் கூறுவதும் உங்களின் பதிவுகள் மற்றும் எண்ணங்களுக்குத்தான். யாரே எவரே எங்கயே திட்டினால் எனக்கு கவலை இல்லை. உங்களுடைய எண்ணங்களைத் தான் அறிய விரும்புகின்றேம். அது எப்படி ஒரு படத்தில் நடித்தவரையும், மற்ற ஒரு படத்தில் பாத்திரம் படைத்தவரையும் திட்டுவார்கள். பார்ப்பான் ஒரு மட்டமான படத்தில் காப்பி பாயாக இருந்தால் கூட இதானால் தான் என்று திட்டுவீர்கள் போலும். நன்று.
ஆமா பல படங்களில் பார்ப்பனிய பெண்களை கேவலமாக சித்தரிக்கும் போது உங்களின் துடிப்பு ஏன் வெளிப்படுவது இல்லை?. பெண்கள் என்றால் பொதுதானே.

கோவி.கண்ணன் சொன்னது…

//பார்ப்பான் ஒரு மட்டமான படத்தில் காப்பி பாயாக இருந்தால் கூட இதானால் தான் என்று திட்டுவீர்கள் போலும். //

எனக்கு தெரிந்து டீ ஆத்துவதாகக் கூட காட்டப்படுவதில்லை. அப்பறம் எங்கே காப்பி ! :)

//நன்று.
ஆமா பல படங்களில் பார்ப்பனிய பெண்களை கேவலமாக சித்தரிக்கும் போது உங்களின் துடிப்பு ஏன் வெளிப்படுவது இல்லை?. பெண்கள் என்றால் பொதுதானே.//

எனக்கு தெரிந்து காட்டப்படவில்லை. பாலாவின் சேது படத்தில் கூட ஒரு பார்பனப் பெண்ணின் மானம் போகக் கூடாது என்று விக்ரம்(சேது) அவளை போர்த்தி பின் சீட்டில் உட்காரவைத்துக் கொண்டு வந்து தொலைவில் விடுவார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்