பின்பற்றுபவர்கள்

20 மே, 2010

கலவை 20/மே/2010 !

திரைக்கு வரும் அம்பேத்கார் : மலையாள நடிகர் மம்மூட்டி நடித்த அம்பேத்கார் திரைப்படம் விரைவில் வெளி இட நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதாம். அம்பேத்கார் படம் தமிழகத்தில் வெளியாகமல் இருக்க முட்டுக்கட்டைப் போட்டே (படத்தை வெளி இடுவதாக வாங்கி)முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று பேசிக் கொள்ளப் பட்டது (எங்கே ? இணையத்தில் தேடினால் தகவல் கிடைக்கும்), இன்னிக்கு தேதியை வைத்து நாடு எப்போதும் சுப்க்ஷ்மாக இருந்ததாக கதை கட்டுவோர், பழைய நிலையை அல்லது இன்றும் சில இடங்களில் வெளிப்படையாக தொடரும் தீண்டாமையை தெரிந்து கொண்டால் கசப்பு உணர்வு ஏற்படும் என்று தேவையற்ற அச்சத்தினால் வரலாறுகள் மறைக்கப்பட வேண்டியவை என்பதாக சிலர் நினைக்கிறார்கள். பெரியார் படமோ, அம்பேத்கார் படமோ அவை பொழுது போக்குப் படங்கள் இல்லை, எனவே வணிக நோக்கம் என்பதைத் தவிர்த்து அவை ஆவணங்களாக இருப்பது வரலாற்றை தெரிந்து கொள்ள முனைவோருக்கு பயனாக அமையும். வள்ளலார் பற்றிய திரைபடம் எடுத்தாலும் வரவேற்பேன், இங்கு வாழ்ந்தவரை விட்டுவிட்டு எங்கோ வாழ்ந்த மகா அவ்தார் பாபாஜி, இராகவேந்திரர் என்று படம் எடுத்த திரு ரஜினி (இளைய ராஜாவின் இசையுடன்) வள்ளலாராக நடித்தால் கண்டிப்பாக வரவேற்பேன். வள்ளலாரை வைத்து பிழைப்பு நடத்தும் சைவ அமைப்புகளும், வள்ளாரை பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிப் பெருமைக்காக அவரைச் சுறுக்கும் சாதி அமைப்புகள் இது குறித்துச் செயல்படுமா ?

அலங்கல் : மே மாதம் - நாசம் - இலங்கை அரசு - நாசமாகப் போச்சு - முள்ளி வாய்க்கால் - காணாமல் போன தமிழர் தலைவன் - கருணாநிதி - ஈனத்தலைவன் - பார்வதி - துறத்தல் - வரவேற்பு - குஷ்பு - திருமா - ஒரே மேடை - ஜெயலலிதா - சோதிடர் - கோபாலபுரம் - அணுராத ரமணன் - மகாபெரியவா - சூர்யா - சுருதிஹாசன் - முருகதாஸ் - இராவணன் - ஐஸ்வர்யா பச்சன் - இலங்கை படவிழா - ரஜினி காந்த் - நன்றி - அமிதாப் - எந்திரன் - எஸ்கேப்பு - ஏஆர் ரஹ்மான் - டி எம் எஸ் - பாட்டு - புதிய தமிழ் தாய் வாழ்த்து - - வரலாறு - செம்மொழி
...ஸ்ப்பா மூச்சு முட்டுது ஒருவாரத்துல இம்புட்டு செய்திகளா ?

மெடிக்கல் மிராக்கல் : நம்ம தமிழ்படத்துல மட்டும் ஏற்படும் மெடிக்கல் மிராக்கல் உண்மையிலேயே ஏற்பட்டு இருக்கிறது. பிறவியிலேயே சிறுநீரகம் கோளாறுடன் பிறந்த சிறுமிக்கு 8 வயதில் சிறுநீரகம் முற்றிலும் பழுதடைந்த நிலையில் புதிதாக சிறுநீரகம் உடலில் வளர்ந்து செயல்படத் துவங்கியதாம். 10 லட்சத்தில் ஒருவருக்கு இப்படியாக உறுப்புகள் புதிதாக தோன்றினாலும் முற்றிலும் வளர்வது கடினமாம். சிறுமி கொடுத்து வைத்தவள்.


முயற்சிக்கு வயது தடை இல்லை : 77 வயது தாத்தா ஒருவர் இளமையில் கைவிட நேர்ந்த படிப்பை 77 வயதில் தொடர்ந்ததில் +2 தேர்வு எழுதி இருக்கிறார். அவருக்கு கிடைத்தது 742 மதிப்பெண்கள். 'கல்வி கற்றேன்' என்பதைச் சொல்ல கல்வி நிறுவனம் தரும் சான்றிதழ் தேவை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. தபால்காரராக இருந்த ஒருவர் இன்று சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் பெரிய அளவில் கொடிகட்டிப் பறக்கிறாராம். அனுபவங்கள் தரும் பாடமும் பள்ளிக் கல்வியும் ஒன்றல்ல. ஆனாலும் சரியான வயதில் மட்டுமே கற்க முடியும் என்பதை உடைத்துக் காட்டிய முதியவருக்கு நல்வாழ்த்துகள்.

**********

எங்க ஊர் தகவல் : மணற்கேணி - 2009 கருத்தாய்வு போட்டியின் வெற்றியாளர்களான திருவாளர்கள் தருமி, தேவன்மாயம் மற்றும் பிரபாகர் ஆகியோர் போட்டியின் நிறைவாக வரும் சனிக்கிழமை முதல் அடுத்த ஞாயிறு வரை சிங்கையில் இருப்பார்கள். அவர்களின் வருகையை ஒட்டி பதிவர் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் நூல் வெளியீடு ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*****

மனநிலையைப் பொருத்து எரிச்சலோ, சிரிப்போ எது ஏற்பட்டாலும் இது ஒரு ஜோக்...

உடன்பிறப்பு 1 : எந்த திராவிடக் கட்சிக்கும் இல்லாத கவுரவம் நம்ம கட்சிக்கு கிடைச்சிருக்கு
உடன்பிறப்பு 2 : ??
உடன்பிறப்பு 1 : கடவுளே.....கடவுளே.... ! எந்த திராவிடக் ஒரு கட்சியிலும் ஒரு 'கடவுள்' சேர்ந்து நீ பாத்திருக்கியா ?
உடன்பிறப்பு 2 : ??
உடன்பிறப்பு 1 : திருச்சியில் கோவில் கண்ட தெய்வம் நம்ம கட்சியில் சேர்ந்திருக்கு.

7 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ஜோக் டாப்பு அண்ணா.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அண்ணே கலவை அருமை.

snkm சொன்னது…

அருமை! திருச்சியில் கோவில் கண்ட தெய்வம்....ஹா ஹா ஹா ஹா!

Cable சங்கர் சொன்னது…

/வெற்றியாளர்களான திருவாளர்கள் தருமி, தேவன்மாயம் மற்றும் பிரபாகர் ஆகியோர் போட்டியின் நிறைவாக வரும் சனிக்கிழமை முதல் அடுத்த ஞாயிறு வரை சிங்கையில் இருப்பார்கள். அவர்களின் வருகையை ஒட்டி பதிவர் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் நூல் வெளியீடு ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.///

வாழ்த்துக்கள் அவர்களுக்கு.. அங்கு இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

கார்மேகராஜா சொன்னது…

பத்து வருடங்கள் கழித்து நமிதாவிற்க்காகவும் ஒரு பதிவு போட வேண்டியிருக்கும். :).

ப.கந்தசாமி சொன்னது…

77 வயது தாத்தா, 77 வயதுன்னா அத்தன நக்கலா, பதிவுலகத்தில 77 வயது தாத்தா போடற ஆட்டத்தைப்பாக்கறீங்க இல்ல. இனிமேற்கொண்டு 77 வயச சாதாரணமா நெனக்காதீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

// Dr.P.Kandaswamy said...

77 வயது தாத்தா, 77 வயதுன்னா அத்தன நக்கலா, பதிவுலகத்தில 77 வயது தாத்தா போடற ஆட்டத்தைப்பாக்கறீங்க இல்ல. இனிமேற்கொண்டு 77 வயச சாதாரணமா நெனக்காதீங்க.//

பிரபல பதிவராக நீங்கள் அடிக்கும் லூட்டி சான்சே இல்லை :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்