பின்பற்றுபவர்கள்

15 நவம்பர், 2010

தமிழக அரசியல் கலவரம் !

அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் (ஒருலட்சம் கோடியாம், ஒரு லட்சம் என்பதே இந்திய பொது மக்களுக்கு பெரிய விசயம், அதையே கொள்ளையடிக்கும் கோடிகளுக்கு முன்பாக பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது) தொடர்பில் திமுகவிற்கும், காங்கிரசிற்கும் இருக்கும் அரசியல் காதலில் கல் எரியும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் ஜெ. முதலில் லட்சம் கோடிகளுக்கான ஊழல் இதில் இந்திய ஆளும் கட்சிக்குத் தொடர்பே இருக்காது என்பதற்கு ஜெ உத்தரவாதம் கொடுக்கிறார் என்பதாக இதை எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, ஜெவின் செயல்பாடுகள் ஊழலைக் கண்டிப்பதற்காகவோ, ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல, கூட்டணி பலத்துக்கு கட்சி சேர்ப்பு என்பதாகத்தான் கொள்ள முடியும். மேலும் ஜெவுக்கு ஊழல் என்றாலே என்னவென்று தெரியாதா என்று பச்சை குழந்தையிடம் கேட்டால் கூட நகைக்கும். எதிர்கட்சிகள் பெரிய விவகாரம் ஆக்கி நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை நிறுத்தும் அளவுக்குச் சென்று கொண்டிருக்கும் ஸ்பெக்டரம் இதில் காங்கிரசு கட்சிக்கு தொடர்பே இருக்காது என்றும் பங்கு சேர்ந்திருக்காது என்று நினைப்பதும் அரசியல் அறிவின்மையின் அபத்தமே, காங்கிரசு ராசாவுக்கு நெருக்கடிக் கொடுத்து பதவி விலகச் சொல்லாததற்கு அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடை பெற்றிருக்க முகாந்திரமே இல்லை என்று கொள்வதற்கு ஒன்றும் இல்லை. தற்பொழுதி உச்ச நீதிமன்றங்களே இவ்வாகரத்தில் தலையிடுவதால் அரசுகளைக் காப்பாற்றிக் கொள்ள ராசாவே முன்வந்து பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்ததாக அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

கழுதைகள் தேய்ந்து கட்டெறும்புகள் ஆகி ஒன்று சேர்ந்து சாரை சரையாகச் சென்றால் தான் சேர்ந்துவாழமுடியும் என்ற கற்பனையை இன்றைய அரசியல் கட்சிகளுக்கு பொறுத்தினால் மிகச் சரியாக இருக்கும் நடுவன் அரசு மற்றும் மாநில அரசு அமைப்பு என்பதில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதே இன்றைய அரசியல் சூழல், இதனால் தான் கூட்டணியாக தேர்தல்களை சந்தித்துவருகின்ற அரசியல் கட்சிகள். கூட்டணி பலம் அல்லது மிகப் பெரிய அனுதாப அலை இவையே வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் நிலைதான் இன்றைய தேர்தல் முடிவுகள். மத்தியில் கூட்டணி ஆட்சி தான் வழி என்றாகிவிட்டபிறகு அதில் கிடைக்கும் அமைச்சர் பதவிகளை தூண்டில் இட்டு தமிழக திராவிடக் கட்சிகளிடையே பேரம் நடத்தி தமிழக சட்டசபையில் கனிசமான இடங்களைப் பெற்றுக் கொண்டே வந்திருக்கிறது காங்கிரஸ். கூடவே காங்கிரஸ் மற்றும் பாமக, விசி ஆகிய கட்சிகள் இணையும் திராவிடக் கட்சிகள் இணைந்து தேர்ந்தலை சந்தித்தால் வெற்றி உறுதி என்பதே தமிழக அரசியலின் பார்முலா. காமராசருக்கு பிறகு காங்கிரஸ் முதல்வர் என்பது கிட்டதட்ட தமிழக அரசியலில் காணல் நீராகிவிட்ட படியால் இந்த முறை தன்னை கூட்டணியில் இணைத்துக் கொள்ள விரும்பும் கட்சிகளுக்கு பலமாகவே செக் வைக்க நினைக்கிறது காங்கிரஸ், கருணாநிதியுடன் கூட்டணி தொடர்ந்தால் 75 இடங்களுக்கு மேலும் பெற்று அதில் 90 விழுகாடு இடம் கிடைத்தால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் அவ்வளவு கிடைக்கவிட்டாலும் திமுக மைனாரிட்டி ஆட்சியாக தொடரவே காங் விரும்புகிறது. ஆலமரமாக வளர்ந்துவிட்ட வாரிசுகள், வாரிசுகளின் செல்வாக்குகளைக் காப்பாற்றிக் கொள்ள கருணாநிதி காங்கிரசின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதைத் தவிர வேறு வழியும் இல்லை.

ஜெ காங்கிரசுவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது காங்கிரசுக்கு அனுகூலம் தான், இதன் மூலம் திமுகவிற்கு நெருக்கடி கொடுத்து மிகுதியான சட்டசபை இடங்களைப் பெற முடியும். இதைத்தான் ஜெவும் எதிர்பார்க்கிறார். காங்கிரசுக்கு நிறைய இடங்களை ஒதுக்குவதன் மூலம் திமுகவினால் பாமக மற்றும் தேமுதிக கட்சிகளை இணைத்துக் கொண்டு அவர்கள் திருப்தி அடையும் அளவுக்கு திமுகவினால் இடம் கொடுக்க முடியாது. இந்த நிலையில் பாமக மற்றும் தேமுதிக கண்டிப்பாக அதிமுகவுடன் இணையவே விருப்பம் தெரிவிக்கும் அதன் மூலம் திமுக - காங் கூட்டணியை எதிர்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்பதே ஜெ-வின் கணக்கு. தனித்து போட்டியிட்டால் ஒரே ஒரு இடம் தான் கிடைக்கும் என்ற நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களை கூட்ட இந்த முறை தேமுதிக எதாவது ஒரு கூட்டணியில் இடம் பெற்றே ஆகவேண்டிய சூழல். காங்கிரஸ் - திமுக கூட்டணி மறு உறுதிப்படுத்தப்பட்டால் பாமகவும், தேமுதிகவும் அதிமுகவுடன் கைகோர்க்கும், கூடவே கம்யூனிஸ்டுகளின் ஆதரவு, சோ இராமசாமி உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்களின் மறைமுக ஆதரவு ஆகியவை ஜெவிற்கு சட்டசபை தேர்தலை சந்திக்க நம்பிக்கை ஊட்டியுள்ளது. இராஜிவ் காந்தி மறைவுக்கு பிறகு எந்த ஒரு தேர்தல் அலையும் இல்லாத நிலையில் கூட்டணி பலங்களே வெற்றி பெற்றுவருகின்றன. இலவசத் திட்டங்கள் கனிசமான வாக்கு பெற்றுத் தந்தாலும் அவற்றில் எதையும் பெறாத நடுத்தரவர்க்கத்தினர் வாக்குகளே தேர்தலில் வெற்றி தோல்விகளை முடிவு செய்வதாக உள்ளன. இந்த முறை தேர்தலில் எந்த ஒரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, குதிரை பேரங்கள் வெற்றி பெற்றால் காட்சிகள் மாறலாம், அப்படிப் பார்க்கும் போது திமுகவிற்கே பணபலம் மிகுதி. இருந்தாலும் தமிழகத்தில் எந்த அரசு அமைந்தாலும் இழுபறி அரசாகத்தான் அமையும். திமுக - காங் கூட்டணி இந்த தேர்தலுக்கும் தொடரும் என்றே நினைக்கிறேன். பதிபக்தி இல்லாதவர், அண்டனோ மொய்னோ போன்ற ஜெவின் சோனியா குறித்த தரக்குறைவான சாடல்களை, சோனியா யானை போல் எதையும் மறக்காமல் தன்னைப் போலவே பலிவாங்குபவர் என்பதை ஜெ அறிந்தவர் தான், இருந்தாலும் ஜெவின் காங்கிரசிற்கு வெளிப்படையான ஆதரவு என்பது அதைவைத்து காங்கிரஸ் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும், கொடுக்க வேண்டும் என்பதே.

9 கருத்துகள்:

குழலி / Kuzhali சொன்னது…

//ஜெவின் காங்கிரசிற்கு வெளிப்படையான ஆதரவு என்பது அதைவைத்து காங்கிரஸ் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும், கொடுக்க வேண்டும்
//
I also guess the same

துளசி கோபால் சொன்னது…

//தமிழக அரசியில் கலவரம்//

அரிசியில் ன்னு தப்பாப் படிச்சுட்டேன்.

கூட்டுக்களவாணிகள் எப்படி வாயைத் திறப்பாங்க:(

ஜோதிஜி சொன்னது…

சோனியா யானை போல் எதையும் மறக்காமல் தன்னைப் போலவே பலிவாங்குபவர்


கூட்டுக்களவாணிகள் எப்படி வாயைத் திறப்பாங்க:(


ஆகா ஆச்சரியமாயிருக்கே. ரௌத்திரம் பழகு என்பது இதுதானா டீச்சர்.

ஜோதிஜி சொன்னது…

மொத்தத்தில் காங்கிரஸின் கணக்கு

சீட்டு அதிகம் வேண்டும்.

இதற்கு மேலும் மேலே எதையும் கண்டுக்க கூடாது.

உன் வழி எதுவோ? ஆனா காங்கிரஸ் வழி பேய்முழி.

சரிதானே கண்ணன்?

தமிழ் உதயம் சொன்னது…

தமிழக அரசியில் கலவரம் என்ற தலைப்பு இப்படி இருக்க வேண்டுமோ. தமிழக அரசியல் கலவரம் அல்லது தமிழக அரசியலில் கலவரம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் said...
//தமிழக அரசியில் கலவரம்//

அரிசியில் ன்னு தப்பாப் படிச்சுட்டேன்.// நானும் தப்பாக ஒரு எழுத்து பிழையோட் எழுதிவிட்டேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//I also guess the same// அப்படியே காங்கிரஸ் 60 இடங்களில் வெற்றிபெற்றாலும், வாங்க கூட்டணி ஆட்சி நடத்துவோம் என்று கூறி ஜெ கருணாநிதி முதல்வர் ஆவதை தடுப்பார்

கோவி.கண்ணன் சொன்னது…

//உன் வழி எதுவோ? ஆனா காங்கிரஸ் வழி பேய்முழி.

சரிதானே கண்ணன்?

11:56 AM, November 15, 2010//

காங்கிரஸ் ஜெ கருணாநிதி போட்டித் தன்மையில் எப்படியேனும் லாபம் அடைய முயற்சிக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் உதயம் said...
தமிழக அரசியில் கலவரம் என்ற தலைப்பு இப்படி இருக்க வேண்டுமோ. தமிழக அரசியல் கலவரம் அல்லது தமிழக அரசியலில் கலவரம்.

12:53 PM, November 15, 2010// எழுத்துப் பிழையை சுட்டியமைக்கு மிக்க நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்