பின்பற்றுபவர்கள்

6 பிப்ரவரி, 2013

'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு !

2005ல் வலைபதிவில் எழுதத்துவங்கி தொய்வில்லாமல் எழுதிவந்தவர்கள் மிகக் குறைவு, எழுதத் துவங்கி இணைய வாசிப்பாளர்களை வலைப்பதிவுகள் பக்கம் இழுத்துவந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் அமரர் டோண்டு இராகவனும் ஒருவர். நேற்று கூட பல பதிவுகளில் பின்னூட்டமிட்டிருந்தார், இவர்து சமூகக் கருத்தாங்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும் ஏனைய இவரது எழுத்துகள் படிக்கக் கூடியவை தான், அன்னாரை சென்னையில் இருமுறை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது, வலைப்பதிவர்கள் கூட்டத்தில் கடற்கரை சந்திப்பில் முதல் முறை சந்திக்கும் பொழுது 'நீங்கள் தான் கோவி,கண்ணனா ?' என்று விசாரித்து தழுவிக் கொண்டார்,  அடுத்த முறை தி.நகரில் பதிவர் கூட்டத்தில் சந்திக்கும் பொழுதும் அவ்வாறே கட்டிக் கொண்டார், சமுக கருத்தாங்களில் இருவரும் எதிர் எதிர் நிலைப்பாடு கொண்டவர்கள் என்று அறியப்பட்ட அளவில் இந்தத் தகவல் பல வலைப்பதிவர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

அவரது எழுத்தில் இருந்தே....

"அதன் பிறகு (கோவி.கண்ணனை) நேரில் சந்தித்தபோது நான் அவரை கட்டித் தழுவி வரவேற்றேன் (இதை இதுவரை யாருக்குமே செய்ததில்லை, அவரைப் பார்த்து என்னையறியாமல் செய்தேன்). பிறகுதான் எனக்கு ஒன்று புரிந்தது. அவருக்கும் எனக்கும் சண்டை வந்தது துரதிர்ஷ்டவசமானது என்று. அதன் பிறகும் பல மன வேற்றுமைகள் வந்தாலும் நாங்கள் இருவருமே அதை ஓரளவுக்கு மேல் வளர விட்டதில்லை என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்."


என்னைப் பொருத்த அளவில் அவரும் அவரது சமூகம் சார்ந்த கருத்தாங்களும் அவராக ஏற்படுத்திக் கொண்டது அல்ல, தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதை அவரது சமூகம் சார்ந்த குரலாக ஒலித்தார் என்றே நினைத்தேன், அவரது சாதிப்பற்றும் சாதிசார்ந்த கருத்தாங்களும் வெளிப்படையானவை என்பதால் பலரும் முகம் சுளித்தனர் என்றாலும் பிறர் மறைவாக செய்துவருவதை இவர் வெளிப்படையாக செய்தார் என்ற அளவில் பாராட்டுக்குரியதே, ஏனைய பார்பனர்கள் சாதிப் பெருமையில் தங்கள் சமூகத்தை 'பிராமணர்' என்று எழுதிவருவது தொடர்கின்ற வேளையில் எனக்கு தெரிந்து 'டோண்டு இராகவன்' ஒருவரே தம் சமூகம் என்றாலும் பார்பனர் பற்றிக் குறிப்பிடும் இடங்களில் 'பார்பனர்' என்றே எழுதிவந்தார், காலம் காலமாக பிராமணர் என்பது சாதியமாகவும், சாதிசார்ந்து பிறப்பு வழி சாதியில் ஒன்றாக அறியப்படுவதால் அதில் தனிச் சிறப்பு ஒன்றும் இல்லை, அவை சாதியக் குழு அடையாளம் தான் என்பதை டோண்டு இராகவன் ஒப்புக் கொண்டே ஆனால் சாதிய அடையாளம் களையப்படத் தேவை இல்லை என்கிற தற்சார்பில் 'பிராமணர்' என்று எழுதாமல் பார்பனர் என்றே எழுதிவந்தார், பார்பனர்களில் இத்தகைய புரிதல் உள்ளவர்கள் வெகு குறைவே. பார்பனர் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை அவர்களும் பலரைப் போன்றவர்கள், சாதிகளுள் ஒன்று என்கிற புரிந்துணர்வில் தான், தான் சிக்கன் விரும்பி சாப்பிட்டுவதையும் தன்னை 'சண்டைக்கார பார்பான்' என்றும் கூட அவரால் வெளிப்படையாக எழுத முடிந்தது.

அவரைப் பொருத்த அளவில் நிகழ்வுகள் கடந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் அவற்றை எழுதும் பொழுது 'சமீபத்தில் 1952ல்' என்றே எழுதிவந்தார், படிப்பவர்களுக்கு நகைச்சுவையாக, முரண்பாடாக இருந்தாலும் அவற்றை பலரும் ரசித்தனர், அவ்வாறு எழுதுவதற்கு அவர் சொன்ன விளக்கம் 'என்னைப் பொருத்த அளவில் நிகழ்வுகள் அனைத்தும் அண்மையில் நடந்ததாக உணர்வதால் நான் அவ்வாறு எழுதுகிறேன்' என்றே குறிப்பிடுவார்.

முன்பெல்லாம் '65 வயது இளைஞனான டோண்டு இராகவன் எழுதுகிறேன்' என்று தன் வயதை வெளிப்படையாகக் கூறி தன்னை இளைஞன் என்றும் கூறிக் கொள்வார், அண்மையில் ஒருபதிவில் என்னதான்  நான் என்னை இளைஞன் எனக்கூறி வந்தாலும், நான் வயதால் கிழவன்தானே. என்றும் எழுதி இருந்தார், நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையாக இருந்து மீண்டும் எழுத வந்தும் தனது பழைய நிலைப்பாடுகளில் எந்த வித சமரசமும் இல்லாமல் அதே வேகத்துடன் தான் எழுதிவந்தார், 


அன்னாரின் மறைவு சோ மற்றும் மோடியின் வலைப்பதிவு ஆதரவாளர் என்ற அளவில் அவர்களுக்கு தெரியாவிட்டாலும் கூட இழப்பு தான். அவரது பெரியார் எதிர்ப்பு எழுத்துகளும் அதற்கான விளக்கமான சுகுணாதிவாகர், குழலி மற்றும் யுவகிருஷ்ணா போன்ற பிறரின் எதிர்வினைகளும்  எம்போன்றவரை பெரியார் அப்படி என்ன தான் செய்தார் என்று அறிய வைத்து பெரியார் மீது பற்றுதல் கொள்ள வைத்தது.

பல்வேறு மொழிகளைப் படித்து பட்டறிவை வளர்த்துக் கொள்பவர்கள் வெகுசிலரே, ஜெர்மனி, ஹிந்தி, ஆங்கிலம் உள்பட ஆறுமொழிகளில் கைதேர்ந்வராகவும் மொழிப்பெயர்பை தன் தொழிலாகவும் வைத்திருந்தார், தாம் எழுத வந்ததே மொழிப் பெயர்ப்பு தொழிலுக்கு விளம்பர வாய்பாக அமையும் என்கிற மற்றொரு காரணமும் உண்டு என்று வெளிப்படையாகச் சொன்னார், ஒருமுறை அவரிடம் பின்னூட்டத்தில் கேட்டேன், 'உங்களுக்கு தெரிந்த மொழிகளில் தமிழைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?' 'சந்தேகமே வேண்டாம், இதில் எனக்கு பாரதியின் நிலைப்பாடு தான்' என்று தமிழைப் பற்றி உயர்வாகவே குறிப்பிட்டு இருந்தார், ஒரு மொழிப் பெயர்பாளர் என்ற அளவில் அவரது இழப்பு மொழிப்பெயர்பாளர்களில் சிறந்த ஒருவரை இழுந்துள்ளோம் என்பதும் தான்.

வலைப்பதிவர்கள் 'தென்திருப்போரை மகர நெடுங்குழைக்காதன்' என்கிற பெயரைக் கேள்விப்படும் பொழுதெல்லாம் டோண்டு இராகவன் வடகலை ஐயங்கார் கண்டிப்பாக நினைவுக்கு வருவார்.

அவர் ஒரு மூத்த வலைபதிவர் மற்றும் என் நண்பர் என்ற அளவில் அவரது இழப்பு எனக்கு மிகுந்த மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளது, நல்ல நண்பர் என்ற முறையில் அவருக்காக இந்த ஒரு சிறப்புப் பதிவு எழுதி அவரைப் பெருமைப்படுத்துவதை நான் கடமையாகவே நினைக்கிறேன்,  திருவிக அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி தி.க தொண்டர்கள் திருவாசகம் ஓதி அவரை பெருமைப் படுத்தியது போல், பெரியார் பற்றாளன் என்ற முறையில் அன்னாரின் ஆன்மா அமைதியடையவும், அவரது இல்லத்தினர் இழப்பில் இருந்து மீண்டு வரவும் மகர நெடுங்குழைக்காதனை பிராத்திகிறேன்,

இரங்கல் பதிவு இணைப்புகள் : 


பிரபல வலைப்பதிவாளர் டோண்டு ராகவன் மரணம் - என்றும் அன்புடன் பாலா


திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். - எடக்கு மடக்கு (முட்டாபையன்)


சாதி இனிஷியல் மாதிரி -  யுவகிருஷ்ணா



டோண்டு ராகவன் -  பத்ரி சேஷாத்ரி



டோண்டு சார் -  கானா பிரபா

பாண்டுச் சோழன் சரித்திரம்  - பினாத்தல் சுரேஷ்

டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!  - சுவனப்பிரியன்

அமரர் டோண்டு ராகவன்.. -  T.V.ராதாகிருஷ்ணன் 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .. .சிராஜ்

பதிவர் டோண்டு மரணம் - கல்வெட்டு 

Dondu Raghavan Sir, We miss you!! - பழமைபேசி

தமிழின் மூத்த பதிவர் டோண்டு ராகவன் மறைவின் நினைவாக - இக்பால் செல்வன்

பதிவர் திரு டோண்டு ராகவன்! - வருண்

டோண்டு ராகவன் இறைவன் அடி சேர்ந்தார் - அருண் அம்பி

டோண்டு! - மு.சரவணக்குமார்

டோண்டு ராகவன் - அஞ்சலி..! - உண்மை தமிழன்

டோண்டு ராகவன். - கேபிள் சங்கர்

டோண்டு ராகவன் சார்! - என். உலகநாதன்

அஞ்சலி – டோண்டு ராகவன் - சா. திருமலைராஜன்

டோண்டு - துளசி கோபால்


டோண்டு சார்- இன்னும் வாழ்ந்திருக்கலாம் - ramachandranusha(உஷா)

50 கருத்துகள்:

Avargal Unmaigal சொன்னது…

அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அவரின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்

அஜீம்பாஷா சொன்னது…

நானும் அவரின் பதிவுகளை படித்திருக்கிறேன் கருத்து வேறுபாடு இருந்தாலும் நாம் எல்லாம் தமிழர் என்ற முறையில் ஒரு சகோதரனை இழந்துவிட்டோம் ,வருத்தமாகத்தான் இருக்கிறது .அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அவரின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்

சேக்காளி சொன்னது…

மனதில் இருப்பதை பயமின்றி சொல்லி வந்த ஒரு பதிவரை இழந்ததன் பாதிப்பு வாசகனாய் எனக்கும் உண்டு.

கார்த்திக் சரவணன் சொன்னது…

மிகவும் உருக்கமான பதிவு........

வவ்வால் சொன்னது…

கோவி,

டோண்டு ராகவன் கருத்துக்களில் எனக்கு உடன்பாடும் இருந்ததில்லை,எழுத்தில் ஈர்ப்பும் இருந்ததில்லை,ஆனால் அவரது கருத்தை சொல்ல அவருக்கு உரிமையுண்டு என்றளவில் அவரது கருத்தினை பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை ,அவர் கருத்து அவருக்கு என்பதால் ஒட்டலுமில்லை,உரசலுமில்லை,அவரது திடீர் மறைவு அதிர்ச்சியையே அளிக்கிறது,அவரது ஆன்மா சாந்தியடையட்டும்,ஆழ்ந்த இரங்கல்கள்!

பெயரில்லா சொன்னது…

தங்களின் கருத்துக்கு எதிர்மறையான கருத்துடையவராயினும் நண்பர் என்கிற முறையில் அவருக்கு மரியாதை செலுத்தும் இந்த பதிவு தங்களின் உயரிய பண்புக்கு சான்று.

வாழ்த்துகள்!

டோண்டு அவர்களின் பதிவுகளை (கருத்து முரண்பாட்டினால்) நான் அதிகம் படித்திருக்கவில்லை. எனினும் அவரின் நேர்மையை தாங்கள் குறிப்பிடுவதுபோல நாம் அனைவரும் பாராட்டவேண்டும்.

விழித்துக்கொள் சொன்னது…

அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அவரின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்
surendran
surendranath1973@gmail.com

கிரி சொன்னது…

திடீர் சம்பவம் என்பதால் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அவரது குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.

தருமி சொன்னது…

என்னை விட இளையவர். அவரது மரணம் என்னையும் உரசிப் பார்க்கிறது! கொஞ்சம் அல்ல .. நிறையவே அதிர்ச்சி.

எனக்குப் பிறகும் கோவி எனக்காக ஒரு பதிவிடுவார் என்றும் ஒரு நம்பிக்கை! (அதில் என்ன எழுத முடியும் என்பதும் ஒரு பெரிய கேள்விக் குறி!!!)

நான் physically -ஆக சந்தித்த முதல் பதிவர். அவர் வீட்டிற்கே சென்று சந்தித்தேன். பதிவர்கள் எல்லோரும் மிகப் பெரிய ஆட்களாக அப்போது என் கண்முன் விரிந்தார்கள்.

அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் காலம் சொல்லும் ...

ராஜ நடராஜன் சொன்னது…

மேலிருந்து கீழாக பதிவுகளைப் பார்க்கும் போது எடக்கு மடக்கு தளம்தான் இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தது என நினைத்தேன்.

எனது ஆழ்ந்த இரங்கலை டோண்டு ராகவன் குடும்பத்தினர்,உறவினர்கள்,நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

நடராஜன்,

இரங்கல் செய்தியை வலைப்பதிவில் முதலில் வெளி இட்டவர் என்றும் அன்புடன் பாலா.

Salahuddin சொன்னது…

வருத்தத்திற்குறிய செய்தி.. அவரது இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை அவர்தம் குடும்பத்தினர் பெற வேண்டுகிறேன்

k.rahman சொன்னது…

my sincere condolences to the departed's family. rest in peace.

Kanags சொன்னது…

எனது ஆழ்ந்த இரங்கல்.

karunakaran சொன்னது…

அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அவரின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்
Karunakaran

Unknown சொன்னது…



அவரின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்

நிகழ்காலத்தில்... சொன்னது…

அன்னாரின் இழப்பு ஈடு செய்ய முடியாததே.. நோய்வாய்ப்பட்ட நிலையிலும் இன்னும் சில காலம் இருப்பார் என்றே எண்ணி இருந்தேன்.

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை..

ஆதி மனிதன் சொன்னது…

My deepest Condolences to his family and friends.

தீப்பெட்டி சொன்னது…

:-(

சிவக்குமார் சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கோவி!
என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்ம சாந்திக்குப் பிராத்திக்கிறேன். நான் தொலைபேசியில் பேசிய விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவர்களில் ஒருவர். கருத்துவேறுபாடு உண்டெனிலும், நீங்கள் சொல்வது போல் ஒளிவு மறைவின்றிப் எழுதுபவர், பேசுபவர். "டோண்டு அண்ணா" அண்ணா என விளிப்பேன்.
சோர்வில்லாத ஒரு எழுத்துப் போராளி!, அவரிடம் நான் பிரமித்தது.
அவர் குடும்பத்தார் மன ஆறுதலடையப் வேண்டுகிறேன்.

Prakash சொன்னது…

கோவி.

நல்ல மனிதர் என்று எப்படி கண்டுகொள்வது?

ராமலக்ஷ்மி சொன்னது…

ஆழ்ந்த அஞ்சலிகள். அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்தனைகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Prakash கூறியது...
கோவி.

நல்ல மனிதர் என்று எப்படி கண்டுகொள்வது?//

உங்கள் அரசியலுக்குள் நான் வரவில்லை,

நல்ல நண்பர் அல்லது நல்ல மனிதர் என்று குறிப்பிடுவதில் வேறுபாடுகள் உள்ளன, நான் பதிவில் என்ன எழுதி இருக்கிறேன் என்று மீண்டும் படிக்கவும்

குலசேகரன் சொன்னது…

varunthukiren.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

// வலைப்பதிவர்கள் 'தென்திருப்போரை மகர நெடுங்குழைக்காதன்' என்கிற பெயரைக் கேள்விப்படும் பொழுதெல்லாம் டோண்டு இராகவன் வடகலை ஐயங்கார் கண்டிப்பாக நினைவுக்கு வருவார். //

அவரைப் பற்றி வெளிப்படையான ஒரு பதிவு. வலைப்பதிவாளர் டோண்டு ராகவன் மறைவு ஒரு அதிர்ச்சி செய்திதான். தன்னளவில் தனது கொள்கையில் உறுதியானவர். அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Prakash சொன்னது…

உங்களைப் பொறுத்தவரையில் ok என்கிறீர்களா?

kankaatchi.blogspot.com சொன்னது…

இறப்பு என்பது அனைவருக்கும் பொது.

இறப்பவர் நம்மோடு தொடர்பு கொண்டவராக இருந்தால் அவர் மறைவு நம்மை. பாதிக்கிறது.

ஒரு விமான விபத்தில் பல நூறு பேர்கள் மரணமடைந்தால் அதை பற்றி. செய்தியை படித்துவிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டுவிட்டு இந்த மனித இனம்.வேறு செய்திக்கு மாறிவிடுகிறது

அவ்வளவுதான் பற்று வைத்தால் கவலையும் பயமும் தொற்றி படரும்.

இந்த உலகில் யாருக்கும் இன்று சுதந்திரம் இல்லை.

யார் எதை சொன்னாலும் அதை எதிர்க்க ஒருவர்,ஏன் கணக்கற்றோர் உள்ளனர்.

லா சா ராமாமிர்தம் என்ற ஒரு எழுத்தாளரின் வரிகளை நான் எப்போதும் நினைத்துகொள்வதுண்டு

.'பிடித்தால் தின்னு. பிடிக்காவிடில். முழுங்கு என்பார்'

கண்ணதாசனின் வரிகளும் எனக்கு பிடித்தவை.

(உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி, மனிதை எதையோ பேசட்டுமே,உன் மனசை பார்த்துக்க நல்லபடி)

எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒருவன் இருக்க வேண்டுமென்றால் அவன் தன வாயை திறந்து ஒரு கருத்தையும் சொல்லாமல் மௌனமாகத்தான் இருக்கவேண்டும்.

கோமதி அரசு சொன்னது…

ராகவன் அவர்கள் மறைவுக்கு அஞ்சலிகள்.
இறைவன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் மனசாந்தியையும் அருள வேண்டுகிறேன்.

ப.கந்தசாமி சொன்னது…

அடடா, டோண்டு போய்ட்டாரா, வருந்துகிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

suvanappiriyan சொன்னது…



அதிர்ச்சியான செய்தி. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

டோண்டு சார் நினைவாக நான் இட்ட பதிவு

http://suvanappiriyan.blogspot.com/2013/02/blog-post_6.html

Radhakrishnan சொன்னது…

எந்தவொரு மனிதரின் திடீர் மரணமும் அதிர்ச்சியை தந்துவிட்டு போகிறது. என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

பெயரில்லா சொன்னது…

அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்...RIP

குட்டன்ஜி சொன்னது…

பதிவுலக ஜாம்பவான்,தன் கருத்தை அஞ்சாமல் சொல்லும் தைரியசாலி மறைந்து விட்டாரா!ஆழ்ந்த இரங்கல்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…
என் ஆழ்ந்த அனுதாபங்கள்.//

தங்கள் இடுகையையும் இதில் இணைத்துள்ளேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப் பிரியன் கூறியது...


அதிர்ச்சியான செய்தி. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

டோண்டு சார் நினைவாக நான் இட்ட பதிவு//

தங்கள் பதிவையும் இதில் இணைத்துள்ளேன்

இராம.கி சொன்னது…

அவரை மூன்று நான்கு வலைப்பதிவர் சந்திப்புகளில் நேரே பார்த்திருக்கிறேன். அவ்வப்போது அவர் வலைப்பதிவையும் படித்திருக்கிறேன். அவர் கருத்துக்கள் பலவற்றோடு நான் முரண்பட்டிருந்தாலும், என்னைப் பற்றிப் பெரிதும் அறிந்திருந்தார். அவருடைய ஆழ்ந்த தொழில்முனைவோர் திறமை பாராட்டப் படவேண்டியதே. அவர் இழப்பால் வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

அன்புடன்,
இராம.கி.

சார்வாகன் சொன்னது…

ஆழ்ந்த அஞ்சலிகள்

கவியாழி சொன்னது…

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்

Unknown சொன்னது…

May his soul rest in peace

பட்டிகாட்டான் Jey சொன்னது…

நம்மிடையே இருந்த ஒருவர் இன்று இல்லை, அதிர்ச்சியாக உள்ளது.

எனது கண்ணீர் அஞ்சலி!

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

'பசி'பரமசிவம் சொன்னது…

ஒரு தமிழ்ப் பதிவரை இழந்ததில் மனம் வருந்துகிறது.

அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Unknown சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//Prakash சொன்னது…
உங்களைப் பொறுத்தவரையில் ok என்கிறீர்களா?//

முதலில் உங்கள் கேள்விக்கு நான் விளக்கம் கொடுத்தப் பிறகும் உங்கள் புரிதல் தவறு என்று ஒப்புக் கொள்ளும் நேர்மை உங்களிடம் இல்லை, எனது பதில்கள் உங்களை திருப்திபடுத்தும் என்கிற எண்ணம் தற்பொழுது எனக்கு இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி சொன்னது…
என்னை விட இளையவர். அவரது மரணம் என்னையும் உரசிப் பார்க்கிறது! கொஞ்சம் அல்ல .. நிறையவே அதிர்ச்சி.

எனக்குப் பிறகும் கோவி எனக்காக ஒரு பதிவிடுவார் என்றும் ஒரு நம்பிக்கை! (அதில் என்ன எழுத முடியும் என்பதும் ஒரு பெரிய கேள்விக் குறி!!!)//


தருமி ஐயா,

பிறந்த ஒவ்வொருவருக்கும் நோயும், விபத்தும் தலைக்கு மேல் தொங்கக் கூடிய கத்திகள். யார் யாருக்கெல்லாம் அவை அறுந்துவிழும் என்று யாருக்கும் தெரியாது.

ssk சொன்னது…

டோண்டு என்ற இன எதிரி இல்லை என்றதை கேட்டதும் மனம் பதைத்கிறதே ...(பெரியார் அடிவருடியாக இருந்தும்)
நேர்மையான மனிதன் இல்லை என்பதாலோ , எதனாலோ தெரியவில்லை

K.R.அதியமான் சொன்னது…

நேற்று மதியம் 2 மணி அளவில் தான் அவர் வீட்டிற்கு செல்ல முடிந்தது. அதற்க்குள் சுடுக்காட்டுக்கு கொண்டு சென்று விட்டார்கள். அங்கு சென்று இறுதி மரியாதை செய்ய முடிந்தது.

ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டோம்.
கடந்த வருடம் அவரிடம் பேசாமல் விட்டுவிட்டேன் என்று மிக வருத்தம்.

gsrikanth சொன்னது…

the demise of dondu ragavan was shocking. I have read his articles with forthright views expressed vehemently. May his soul rest in peace.

திகழ் சொன்னது…

ஆழ்ந்த அஞ்சலிகள்

அவரின் குடும்பத்தினருக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://my-tamil.blogspot.sg/2009/01/blog-post_06.html

அவரின் மொழித்திறன் வியக்க வைக்கிறது.

அவரின் பின்னோட்டத்தை என் வலைப்பக்கத்திலும் காணக் கண்டவன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்